இந்த படத்தில் சந்தானம் பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டராக வருகிறார். பைத்தியங்களாக வரும் இளம்பெண்களிடம் டாக்டர் சந்தானம் செய்யும் சில்மிஷங்களை மிகவும் கிளாமராக படமாக்கியுள்ளாராம் இயக்குனர் சாய் கோகுல். இவர் இயக்குனர் கே.வி.ஆனந்த்திடம் உதவி இயக்குனராக இருந்தவர்.சந்தானம் ஏற்கனவே தில்லாலங்கடி என்ற படத்தில் மனநல டாக்டராக நடித்து காமெடியில் கலக்கியவர்தான். இந்த படத்தில் அதை மிஞ்சும் வகையில் பயங்கர காமெடி காட்சிகள் அடங்கியுள்ளதாம். ஆனால் தற்போது இந்த படத்திற்கு புதிய பிரச்சனை ஒன்று வந்துள்ளதாம்.
மனநிலை சரியில்லாதவர்களை அவமதிக்கும் வகையில் இந்த படத்தில் காட்சிகள் இருப்பதாகவும், இந்த படத்தை தடை செய்யவேண்டும் என்றும் மகளிர் அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வழக்கு தொடரப்போவதாக பயமுறுத்தி வருகிறார்களாம். இதனால் சந்தானம் பதட்டமடைந்து இந்த படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் நகைச்சுவைக்காக கற்பனையாக எடுக்கப்பட்டதுதான். யாரையும் குறிப்பிட்டோ அல்லது மனம் புண்படுத்துவதற்காகவோ எடுக்கப்படவில்லை என்று கூறிவருகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி