மற்றநாடுகள் அனைத்துக்கும், அடுத்த 8 ஆண்டுக்கு கிடைக்கும் வருமானம் குறைந்துவிடும். தவிர, தலைவர் பதவிக்கு ‘டாப்–3’ நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் தான் வரமுடியும்.இது ஐ.சி.சி.யை., அபகரிக்கும் செயல் என, பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று துபாயில் துவங்கிய ஐ.சி.சி., கூட்டத்தில் புதிய விதிகள் தாக்கல் செய்யப்பட்டன.
இது நிறைவேற 10ல் 7 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. ஆனால், துவக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்த தென் ஆப்ரிக்காவுடன், ஆசிய நாடுகள் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் என, மொத்தம் 4 நாடுகள் இணைந்து கொண்டன.
நியூசிலாந்து, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளன. இப்போதைய நிலையில் தீர்மானம் நிறைவேற, எதிர்ப்பு தெரிவித்த 4 நாடுகளில் இருந்து யாராவது ஒருவரது ஆதரவு கட்டாயம் தேவை. இதனால், புதிய நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தால், பொது இடத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் தொடரை நடத்தலாம் என, பி.சி.சி.ஐ., பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) தலைவர் ஜக்கா அஷ்ரப்பிடம் பேசியது. இருப்பினும், பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியது.இன்று ஐ.சி.சி., கூட்டத்தின் இரண்டாவது மற்றும் கடைசி நாள். ஒருவேளை தீர்மானம் ஏற்கப்படவில்லை எனில், ஐ.சி.சி., தொடர்களில் பங்கேற்பதில் இருந்து விலகுவோம் என, பி.சி.சி.ஐ., தெரிவித்துள்ளது. இதனால், இன்றைய கூட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி