January 29, 2014

செய்திகள், முதன்மை செய்திகள்

ராமேஸ்வரம் – சென்னை ரயிலின் பெயரை ‘பாம்பன் எக்ஸ்பிரஸ்’ என மாற்ற கலாம் கோரிக்கை…

ராமேஸ்வரம்:-பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவுற்றதை சிறப்பிக்கும் வகையில் பாம்பன் ரயில் பாலத்தின் நூற்றாண்டு விழா தொடக்க விழா செவ்வாய்கிழமை பாம்பன் ரயில் நிலையம் அருகே நடைபெற்றது. பாம்பன் பாலம் நூற்றாண்டு விழாவுக்கு தெற்கு ரெயில்வே நிர்வாக பொது மேலாளர் ராஜேஸ் மிஸ்ரா தலைமை வகித்தார். மதுரை கோட்ட மேலாளர் ரஸ்தோகி வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரித்திஷ், சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கல்வெட்டை திறந்து வைத்து ஆற்றிய உரையாற்றும்போது, ”ராமேஸ்வரம் எனது பிறந்த ஊராக இருந்தாலும் பாம்பன் என் வாழ்க்கையில் ஓர் அங்கம். பாம்பனில் என் உறவினர்கள், நண்பர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை எல்லாம் இந்த நிகிழ்ச்சியில் சந்தித்ததில் மகிழ்ச்சி.இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் மண்டபத்தில் இருந்து பாம்பன் பாலத்துக்கு சிறப்பு ரயில் மூலம் நண்பர்கள் மூலம் வந்தேன். அது ஒரு பரவசமான அனுபவம். அப்போது கடல் ஏற்படுத்திய ஓசையும், இனிமையான கடல் காற்றும் அழகிய கவிதை போன்று இருந்தது. நான் பள்ளியில் பயிலும்போதும், கல்லூரியில் பயிலும் போதும் பல நூறுமுறை இந்த பாம்பன் பாலத்தை ரயிலில் கடந்து சென்றிருக்கின்றேன். 103 வயது வரை வாழ்ந்த எனது தந்தையாரும், 97 வயது வரை வாழ்ந்த எனது தாயாரும் பல ஆயிரம் முறை இந்த பாம்பன் பாலத்தை கடந்து போயிருப்பார்கள்.நூற்றாண்டு கண்ட பாம்பன் பாலம் என்றால் என்ன? இந்த பூமி சூரியனை 365 நாள் சுற்றினால் ஓரு வருடம் ஆகின்றது. அது போல 100 முறை சூரியனை சுற்றிவர ஆகும் காலம் நூறாண்டுகள் ஆகும். இந்த நூறாண்டுகள் காலம் பாம்பன் பாலத்தை புயலிலும், சூறாவளியிலும், கடல் சீற்றத்திலும் பாதுகாத்து வரும் தெற்கு ரயில்வே துறையை பாராட்டுகின்றேன்.மேலும் ராமேஸ்வரம்–சென்னை ரயிலுக்கு ‘பாம்பன் எக்ஸ்பிரஸ்‘ என பெயர் சூட்ட வேண்டும். அதுபோலவே ராமேஸ்வரத்தில் இருந்து செல்லும் ஒவ்வொரு ரயிலிலும் மீனவர்கள் மீன்களை கொண்டு செல்வதற்காக ஐஸ் பெட்டி வசதி செய்து தர வேண்டும் என நான் தெற்கு ரயில்வேக்கு, ரயில்வே அமைச்சருக்கும் கோரிக்கை வைக்கின்றேன், என்றார்.

செய்திகள், திரையுலகம்

‘தாவூத்’ படத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை– ஸ்ருதிஹாசன்…

சென்னை:-இன்றைய நாளிதழ்களில் ஸ்ருதிஹாசன் கலக்கும் ‘தாவூத்’ என்ற பெயரில் ஒரு படத்தின் விளம்பரம் வெளிவந்துள்ளது.இன்று இசை வெளியீடு என்றும் அடுத்த மாதம் பிப்ரவரி 7ம் தேதி வெளியாகிறது என்றும் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. “இந்த படத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமில்லை. இப்போது அது பற்றி சட்ட யோசனைக்குட்பட்டுள்ளேன். விரைவில் இது பற்றிய தகவலை தெரிவிக்கிறேன், ” என ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஹிந்தியில் வெளியான ‘டி – டே’ என்ற படத்தின் தமிழ் மொழி மாற்றுப் படம்தான் இது.அநேகமாக, ஸ்ருதிஹாசன் இந்த பட வெளியீட்டை சட்ட பூர்வமாக சந்திக்கலாம் எனத் தெரிகிறது.

செய்திகள், திரையுலகம்

அஜீத் விஜய்யால் பாதிப்பட்ட ஜாக்கிசான்…

சென்னை:-பெரிய பட்ஜெட்டில் உருவாகும் பெரிய நடிகர்கள் படங்கள் வெளியாகும்போது சிறுபட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதாலும், போட்டியை சமாளிக்க முடியாது என்பதாலும் ரிலீஸ் தள்ளிப் போடப்படுகிறது. அந்தவரிசையில் விஜய் நடித்த ஜில்லா, அஜீத் நடித்த வீரம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியானதால் பல சிறுபட்ஜெட் படங்கள் தாமதமாக ரிலீஸ் ஆகிறது. இந்த நிலை ஜாக்கிசான் படத்துக்கும் ஏற்பட்டது. பொங்கல் தினத்தில் வெளியாக இருந்த போலீஸ் ஸ்டோரி (6ம் பாகம்) திடீரென்று தள்ளிப்போடப்பட்டது. ஒரு மாதம் தாமதமாக பிப்ரவரி 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது.சுரபி பிலிம்ஸ் எஸ்.மோகன் தமிழ், ஆங்கிலத்தில் இப்படத்தை வெளியிடுகிறார். இதில் ஜாக்கிசான் நடித்திருப்பதுடன் அவரே தயாரித்தும் இருக்கிறார். டிங் ஷெங் இயக்கி இருக்கிறார். ஏற்கனவே சீனா, ஹாங்காங், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அந்தந்த மொழிகளில் இது ரிலீஸ் ஆகி வசூல் ஈட்டியது. ஆங்கிலத்தில் இந்தியாவில்தான் முதன்முதலாக ரிலீஸ் ஆகிறது.அமெரிக்காவில் சில மாதங்களுக்கு பிறகே ரிலீஸ் ஆக உள்ளது. இது தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. மொத்தம் 150 சென்டர்களில் வெளியாகும் இப்படம் ஆக்ஷன் படமாக உருவாகி இருப்பதுடன் முதன்முறையாக சொந்த குரலில் ஜாக்கி சான் ஒரு பாடலும் பாடி இருக்கிறார்.

செய்திகள்

கோழியை காதலிக்கும் குரங்கு…

இந்தோனேசியா:-காதல் உணர்வு மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் சொந்தமானது. ஆனால் விலங்கு, பறவை என 2 வெவ்வேறு இனங்களுக்கு இடையே கூட காதல் வரும் என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது. இந்தோனேசியாவில் ஒரு குரங்கும், கோழியும் தினந்தோறும் காதல் ரொமான்சில் ஈடுபடுவதை பார்ப்போர் இப்படித்தான் கூறுகிறார்கள்.இந்தோனேசியாவின் ஜாவா தீவை சேர்ந்த ஹக்கிம் என்பவர், அங்குள்ள பானுவாங்கி சந்தைக்கு தினமும் தனது குரங்கை சங்கிலியால் கட்டி அழைத்து வருகிறார். அப்போது அங்கே ஒரு கோழியும் வருகிறது. கோழியை பார்த்த பின்னர், ஹக்கிம் எவ்வளவுதான் முயன்றாலும் குரங்கு அங்கிருந்து நகராது. பின்னர் குரங்கும், கோழியும் ஒன்றையொன்று கட்டியணைத்துக் கொள்கின்றன இதை பார்ப்போர் கலிகாலத்தில் இதெல்லாம் சகஜமப்பா என கூறியபடியே கடந்து செல்கின்றனர்.

செய்திகள், விளையாட்டு

இந்தியாவுக்கு எதிராக திரும்பிய ஆசிய நாடுகள்…

துபாய்:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி.,), இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன.இதன் நிதி பகிர்வு, தலைமை, நிர்வாகம் உட்பட பல பிரிவுகளில் மாற்றம் கொண்டுவர, புதிய பரிந்துகரைகள் அளிக்கப்பட்டன. இதன்படி, லாபத்தில் இந்தியாவுக்கு அதிக பங்கு தரப்படும். அடுத்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு கூடுதல் வருமானம் தரப்படும். மற்றநாடுகள் அனைத்துக்கும், அடுத்த 8 ஆண்டுக்கு கிடைக்கும் வருமானம் குறைந்துவிடும். தவிர, தலைவர் பதவிக்கு ‘டாப்–3’ நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் தான் வரமுடியும்.இது ஐ.சி.சி.யை., அபகரிக்கும் செயல் என, பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று துபாயில் துவங்கிய ஐ.சி.சி., கூட்டத்தில் புதிய விதிகள் தாக்கல் செய்யப்பட்டன. இது நிறைவேற 10ல் 7 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. ஆனால், துவக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்த தென் ஆப்ரிக்காவுடன், ஆசிய நாடுகள் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் என, மொத்தம் 4 நாடுகள் இணைந்து கொண்டன. நியூசிலாந்து, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளன. இப்போதைய நிலையில் தீர்மானம் நிறைவேற, எதிர்ப்பு தெரிவித்த 4 நாடுகளில் இருந்து யாராவது ஒருவரது ஆதரவு கட்டாயம் தேவை. இதனால், புதிய நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தால், பொது இடத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் தொடரை நடத்தலாம் என, பி.சி.சி.ஐ., பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) தலைவர் ஜக்கா அஷ்ரப்பிடம் பேசியது. இருப்பினும், பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியது.இன்று ஐ.சி.சி., கூட்டத்தின் இரண்டாவது மற்றும் கடைசி நாள். ஒருவேளை தீர்மானம் ஏற்கப்படவில்லை எனில், ஐ.சி.சி., தொடர்களில் பங்கேற்பதில் இருந்து விலகுவோம் என, பி.சி.சி.ஐ., தெரிவித்துள்ளது. இதனால், இன்றைய கூட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகள், முதன்மை செய்திகள், விளையாட்டு

ஐ.சி.சி.யின் தலைவராகிறார் சீனிவாசன்…

துபாய்:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி.,), இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய ‘டாப்–3’ நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் வகையில், புதிய பரிந்துரைகள் உருவாக்கப்பட்டன. இதன்படி, லாபத்தில் இந்த மூன்று நாடுகளுக்கும் அதிக பங்கு தரப்படும். மற்றநாடுகளுக்கு, அடுத்த 8 ஆண்டுகளுக்கு வருமானம் குறைந்துவிடும். தவிர, தலைவர் பதவிக்கு ‘டாப்–3’ நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டுமே வரமுடியும். இது ஐ.சி.சி.யை., அபகரிக்கும் செயல் என, பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், துபாயில் துவங்கிய ஐ.சி.சி., கூட்டத்தில் புதிய விதிகள் தாக்கல் செய்யப்பட்டன.இது நிறைவேற 10ல் 7 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. ஆனால், துவக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்த தென் ஆப்ரிக்காவுடன், ஆசியாவின் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் என, மொத்தம் 4 நாடுகள் இணைந்து கொண்டன. இதனால், சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும், ஆறு மணி நேர விவாதத்துக்குப் பின்,பெரும்பாலான தீர்மானங்கள் ஒருமனதாக ஏற்கப்பட்டன. அதேநேரம், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்தின் கட்டுப்பாட்டுக்குள் ஐ.சி.சி.,யை கொண்டு வரப்படும் தீர்மானத்துக்கு அதிக எதிர்ப்பு காணப்பட்டது. இதன் மீதான ஓட்டெடுப்பு அடுத்த மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஐ.சி.சி.,க்கு வலிமையான தலைமை தேவை என்பதால், கிரிக்கெட்டை வழிநடத்தும் பொறுப்பு பி.சி.சி.ஐ.,க்கு தரப்பட்டது. இதன் அடிப்படையில், ஐ.சி.சி., யின் புதிய தலைவராக, பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் தேர்வு செய்யப்பட உள்ளார். இவர், 2016 வரை இப்பதவியில் இருப்பார் என்று தெரிகிறது.

செய்திகள்

பான் கார்டு விண்ணப்ப கட்டணம் ரூ.105…

புதுடெல்லி:-பான் கார்டு வழங்குவதில் உள்ள நடைமுறைகள் அடுத்த மாதம் 3ம் தேதி முதல் மாற்றப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, பான் கார்டுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் முகவரி சான்று, அடையாள சான்று, பிறந்த தேதிக்கான சான்று ஆகியவற்றை உறுதி செய்ய ஒரிஜினல் சான்றிதழ்களையும் இணைக்க வேண்டும். சுய சான்றிட்ட நகலுடன் ஒப்பிட்டு பார்த்த பிறகு இவை உடனடியாக திருப்பி அளிக்கப்படும். இந்த புதிய பான் கார்டுக்கு விண்ணப்ப கட்டணம், வரிகள் உட்பட ரூ.105 இருக்கும். சேவை வரிகளில் எந்த மாற்றமும் இல்லை’ என வருமானவரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முன்பு பான் கார்டு விண்ணப்ப கட்டணம் வரிகள் உட்பட ரூ.94 ஆக இருந்தது.

செய்திகள், விளையாட்டு

ஒலிம்பிக் சாம்பியனுக்கு தடை…

சியோல்:-தென்கொரியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரர் லீ யாங் டேவ். 25 வயதான இவர் 2008–ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கில் கலப்பு இரட்டையரில் தங்கப்பதக்கமும், 2012–ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் ஆண்கள் இரட்டையரில் வெண்கலப்பதக்கமும் வென்றவர். ஊக்கமருந்து பரிசோதனைகளுக்கு வராததற்காக இவர் மீது உலக தடகள சம்மேளனம் கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது. போட்டி இல்லாத காலங்களிலும் வீரர்கள் ஊக்கமருந்து சோதனைக்கு தயாராக இருக்க வேண்டும். அப்போது தாங்கள் எங்கே இருக்கிறோம் என்ற விவரங்களை தெரியப்படுத்த வேண்டியது அவசியம். ஆனால் இதை செய்ய அவர் தவறி விட்டார். பேட்மிண்டன் சம்மேளனத்தின் ஊக்கமருந்து தடுப்பு கழக அதிகாரிகள் மூன்று முறை முயற்சித்தும், அந்த விவரங்களை அவர் வழங்கவில்லை. இதையடுத்து ஊக்கமருந்து தடுப்பு கழக விதிகளை மீறியதாக அவருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2015–ம் ஆண்டு ஜனவரி 23–ந்தேதி வரை தடை நீடிக்கும். இதனால் கொரியாவில் செப்டம்பர்–அக்டோபர் மாதங்களில் நடைபெறும் ஆசிய விளையாட்டில் அவரால் பங்கேற்க முடியாது. இன்னொரு கொரிய பேட்மிண்டன் வீரர் கிம் கி–ஜங்குக்கும் இதே பிரச்சினைக்காக ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

செய்திகள், திரையுலகம்

ஜெய்யை நினைத்து அலறும் நடிகைகள்…

சென்னை:-சினிமா உலகைப்பொறுத்தவரை ஹிட் படங்களில் நடித்த ஜோடிகளை இணைத்து காதல் கிசுகிசுக்கள் கசிவது சகஜமாகி விட்டது. ஆனால், அதற்கு சிலர் மறுப்பு சொன்னாலும், பலர் அதை கண்டும் காணாததும் போலவே இருந்து விடுகிறார்கள். காரணம், இன்றைய நிலையில் கிசுகிசுக்கள்கூட சிறந்த பப்ளிசிட்டியாக கருதப்பட்டு வருகிறது. அப்படித்தான் சுப்ரமணியபுரம் படத்தில் ஜெய்-ஸ்வாதி இருவரும் நடித்தபோதும் அவர்களைப்பற்றி கலர் கலராக காதல் கிசுகிசுக்கள் புகைந்தன. அதற்கு அவர்கள் எந்தவொரு மறுப்பும் சொல்லாமல், இப்படியெல்லாம்கூட இலவச விளம்பரம் கிடைக்கிறதே என்று ரசித்துக்கொண்டிருந்தார்கள். அதையடுத்து, எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தபோதும் ஜெய்யுடன், அஞ்சலியை இணைத்து காதல் செய்திகள் வெளியானது. அதைத் தொடர்ந்து திருமணம் என்னும் நிக்கா படத்தில் ஜெய்யுடன் ஜோடி சேர்ந்த மலையாள நடிகை நஸ்ரியாவையும் அவருடன் இணைத்து வழக்கம்போல் காதல் செய்திகள் பரபரப்பாக வெளியாகிக்கொண்டிருந்தன. இதற்கு நஸ்ரியா மறுப்பு சொன்னபோதும், ஜெய் மட்டும் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தார்.இந்த சூழ்நிலையில், ஜெய்யுடன் காதல் கிசுகிசுவில் முதலில் சிக்கிய ஸ்வாதி, சுப்ரமணியபுரம் மெகா ஹிட்டானபோதும் அதன்பிறகு படமில்லாமல் ஆந்திராவுக்கு திரும்பி விட்டார். அதையடுத்து, படுவேகமாக வளர்ந்து கொண்டிருந்த அஞ்சலியோ, எங்கேயும் எப்போதும் படத்தையடுத்து சித்தியுடன் ஏற்பட்ட பிரச்சினையால் கோடம்பாக்கத்தையே காலி பண்ணி விட்டு ஓட்டம் பிடித்து விட்டார். அவர்களைத் தொடர்ந்து நஸ்ரியாவோ, வேகமாக படங்களில் புக்காகி வந்தவர், இப்போது பகத்பாசிலை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறிக்கொண்டு நடிப்புக்கே குட்பை சொல்லி விட்டார். ஆக, ஜெய்யுடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய அத்தனை நடிககளுமே காணாமல் போய் விட்டார்கள். இந்த சேதி, தற்போது ஜெய்யுடன் நடித்து வரும் புதுமுக நடிகைகளுக்கு தெரியவர, கலவரமான மனநிலையுடனேயே இருக்கிறார்களாம். ஜெய்யுடன் சிரித்து பேசினால்கூட அது காதல் செய்தியாகி இந்த ஒரு படத்தோடு தாங்கள் சினிமாவை விட்டே வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், அவர் தங்களைப்பார்த்து சிரித்து பேசினால்கூட முகத்தை வெறுப்பாக வைத்துக்கொண்டே நிற்கிறார்களாம் நடிகைகள். மேலும் அடுத்தடுத்து ஜெய்யுடன் நடிப்பதற்கு கால்சீட் கேட்டு எந்த நடிகையிடம் சென்றாலும், ஆளை விடுங்க சாமி என்று அலறிக்கொண்டு ஓடுகிறார்களாம்.

செய்திகள், திரையுலகம்

‘தூம் 3’யின் வசூல் சாதனையை முறியடித்த ‘ஜில்லா’…

இங்கிலாந்து:-‘யுகே பாக்ஸ் ஆபீஸ்’ (UK Box Office)-ல் கடந்த இரண்டு வாரங்களிலேயே ‘ஜில்லா’ திரைப்படம் ஒரு புதிய சாதனையை படைத்திருக்கிறது.இந்த இரண்டு வாரங்களில் ‘ஜில்லா’ திரைப்படம் ஏறக்குறைய 50,000 யுஎஸ் டாலர்களை வசூலித்துள்ளது. ஆனால், ‘தூம் 3’ திரைப்படம் ஐந்து வாரங்களுக்கு முன் வெளிவந்து 45,000 யுஎஸ் டாலர்களைதான் வசூல் செய்துள்ளது.‘யுஎஸ் பாக்ஸ் ஆபீஸ்’ நிலவரங்களுக்கு அடுத்து அதிகமாக பேசப்படும் ‘யுகே பாக்ஸ் ஆபீஸ்’ல் ஒரு தமிழ்ப் படம் , 100 கோடி ரூபாய்க்கும் மேல் செலவழிக்கப்பட்டு படமான ‘தூம் 3’ படத்தின் வசூல் சாதனையை முறியடித்திருப்பது பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் பெருமையாகப் பேசப்படுகிறது . தமிழ்ப் படங்களின் உலக மார்க்கெட் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருவது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.

Scroll to Top