44 வயதாகும் ஷேன் வார்ன், ஆஸி. அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் லீமானுக்கு ஆலோசகராக இருப்பதோடு, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சிறப்புப் பயிற்சியும் அளிக்கிறார்.சுழற்பந்து வீச்சு குறித்துப் பேசிய லீமான், “டி20 உலகக் கோப்பை போட்டி வங்கதேசத்தில் நடைபெறுவதால் சுழற்பந்து வீச்சு மிக முக்கியமானதாகும். ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பயிற்சியளிக்க ஷேன் வார்னைவிட சிறந்த வழி எதுவும் இல்லை” என்றார்.
இது தொடர்பாக வார்ன் கூறுகையில், “ஆஸ்திரேலிய வீரர்களுடன் இணைந்து பணியாற்ற நான் ஆர்வத்தோடு காத்திருக்கிறேன். உலகக் கோப்பைக்காக சிறப்பான உத்திகளை வகுப்பதோடு, மனரீதியாகவும் சிறப்பாகத் தயாராக வேண்டும்” என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி