மெல்போர்ன்:- இன்று நடந்த அரையிறுதிப் போட்டியில் 2-6 என்ற செட் கணக்கில் முதல் செட்டை இழந்த போதிலும், சிறப்பாக விளையாடி 2வது செட்டை 6-3 என்ற செட்கணக்கில் கைப்பற்றியது. பின்னர் 3வது செட்டையும் 10-2 என்ற செட் கணக்கில் கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
தொடர்ந்து இரண்டு முறை கலப்பு இரட்டையர் பிரிவுக்கான கிராண்ட் ஸ்லாம் போட்டியை வென்றுள்ள சானியா தற்போது மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.ஆஸ்திரேலியா ஜோடி செய்த 9 தவறுகளை பயன்படுத்திக்கொண்ட இந்த ஜோடி நேர்த்தியாக விளையாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஏற்கனவே கடந்த 2009 ஆம் ஆண்டில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற சானியா தற்போது 2வது முறையாக அப்பட்டத்தை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி