செய்திகள்,திரையுலகம் 60அடி கிணற்றில் குதித்த நடிகர்…

60அடி கிணற்றில் குதித்த நடிகர்…

60அடி கிணற்றில் குதித்த நடிகர்… post thumbnail image
சென்னை:-சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்து சிவகார்த்திகேயன் பெரிய ஹீரோவாகி விட்டதையடுத்து, இப்போது சின்னத்திரையில் இருந்து இமான் அண்ணாச்சியும் சினிமாவுக்கு வந்து வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார். பிரபுசாலமனின் கயல் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும் இமான் அண்ணாச்சி, அது வேற இது வேற, விதார்த் நடித்துள்ள பட்டைய கிளப்பனும் பாண்டியா உள்பட பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார்.

இதில், பட்டைய கிளப்பனும் பாண்டியா படத்தில் ஒரு காட்சியில் உயிரை பணயம் வைத்து நடித்துள்ளாராம் இமான் அண்ணாச்சி. இதுபற்றி அவர் கூறுகையில், இந்த படத்தில் மின்னல் தண்டபாணி என்ற பஸ் முதலாளி வேடத்தில் நடிக்கிறேன். கே.பி டிராவல்ஸ் மாதிரி எனது நிறுவனத்தை பெரிய அளவில் வளர்க்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கமாக இருக்கும். ஆனால், என் பஸ்ஸை ஓட்டும் டிரைவர் விதார்த், கண்டக்டர் சூரி இருவரும் வரவுக்கு மிஞ்சிய செலவு கணக்கை காண்பித்து என்னை நஷ்டப்படுத்திக்கொண்டிருப்பார்கள்.

மேலும், இந்த படத்தில் எனக்கு காமெடியான வேடம் என்றாலும், ரிஸ்க்கான காட்சியிலும் நடித்திருக்கிறேன். அதாவது, ஒரு காட்சியில் 60 அடி ஆழமுள்ள ஒரு கிணற்றுக்குள் என்னை குதிக்க சொன்னார் டைரக்டர். ஆனால் கிணற்றை எட்டிப்பார்த்தபோது, நான் பதறி விட்டேன். இருப்பினும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடிக்க ரெடியாகினேன்.அப்படி நான் குதித்தபோது, 8 முதல் 10 வினாடிகள் வரை ஆனது. ஒரு வழியாக குதித்து விட்டேன். அப்பாடா தப்பிச்சேன் என்று நினைத்தபோது, காட்சி சரியாக பதிவாகவில்லை என்று கேமராமேன் சொல்ல, மீண்டும் அந்த காட்சியை ஒன்மோர் கேட்டார் டைரக்டர். அதனால், மறுபடியும் கிணற்றுக்குள் குதித்தேன். ரிஸ்க்கான காட்சிதான் என்றாலும், கதைக்கு அவசியப்பட்டதால் நடித்தேன் என்று சொல்லும் இமான் அண்ணாச்சியிடம், எதற்கு ரிஸ்க், டூப் நடிகரை யூஸ் பண்ண வேண்டியதானே? என்றதற்கு, நமக்காக இன்னொருவரை கஷ்டப்படுத்துவதை நான் விரும்பவில்லை என்று ஒரே வார்த்தையில் முடித்துக்கொள்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி