இந்நிலையில் ஹன்சிகாவை நோக்கி சிம்பு பாடுவதாக தற்போது புதிய பாடல் ஒன்று இணைக்கப்பட்டிருப்பதாகவும் இந்த பாடல் படத்துக்கு மட்டுமின்றி தன் மனதில் உள்ளதை நேரடியாகவே நிஜ வாழ்க்கையில் ஹன்சிகாவிடம் தன் காதலை தெரிவிப்பது போல் உள்ளதாகவும் இருக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.
நயன்தாரா, ஆண்ட்ரியாவுடன் ஏற்பட்ட நட்பால்தான் கடுப்பாகி ஹன்சிகா பிரிந்ததாக கூறப்பட்டது. எனவே ஹன்சிகாவை சமாதானப்படுத்தும் நோக்கத்தில் இந்த பாடலில் ‘நயன் தாராவும் வேண்டாம், ஆண்ட்ரியாவும் வேண்டாம், நீ மட்டுமே வேண்டும், யூ ஆர் மை டார்லிங்‘ போன்ற வரிகள் இடம்பெறுகின்றன. இந்த ஒரு பாடலை மட்டும் பிப்ரவரி 3ஆம் தேதி வெளியிட சிம்பு முடிவு செய்திருக்கிறார். அன்றுதான் அவருடைய பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்புவின் கோரிக்கையை ஏற்று ஹன்சிகா மீண்டும் சிம்புவை காதலிப்பாரா என்று இனிமேல்தான் தெரியும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி