செய்திகள் கடன் வாங்கியவரின் மூக்கை கடித்து துப்பிய வாலிபர்…

கடன் வாங்கியவரின் மூக்கை கடித்து துப்பிய வாலிபர்…

கடன் வாங்கியவரின் மூக்கை கடித்து துப்பிய வாலிபர்… post thumbnail image
ஒண்டோரியோ:- ஒவென் சவுண்ட் என்ற பகுதியில் உள்ள ஒருவர், மற்றொருவருக்கு பணம் கடன் கொடுத்துள்ளர். சனிக்கிழமை காலை கொடுத்த கடனை கேட்டபோது ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றி, திடீரென கடன் கொடுத்தவர், கடன் வாங்கிய நபரை தாக்கியதோடு, அவருடைய மூக்கையும் கடித்து சேதப்படுத்திவிட்டார்.

அருகில் உள்ள வீடுகளில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின்படி விரைந்து வந்த போலீஸார் மூக்கை கடித்தவரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

விசாரணையில் மூக்கை கடித்தவர் மைகேல் சாவ்ஸ்லாக் என்றும் அவர் ஒண்டோரியோவின் ஒவென் சவுண்ட் பகுதியை சேர்ந்தவர் என்றும் அவருக்கு 30 வயது என்பதும் தெரியவந்தது.கைது செய்யப்பட்ட மைகேல் சாவ்ஸ்லாக் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி