இன்று காலை நடந்த பெண்கள் ஒற்றையர் அரை இறுதி ஆட்டம் ஒன்றில் 4–ம் நிலை வீராங்கனையான லீ நா (சீனா)– 30–ம் நிலை வீராங்கனை பவுச்செர்ட் (கனடா) மோதினார்கள்.இதில் லீ நா 6–2, 6–4 என்ற நேர்செட் கணக்கில் பவுச்செர்ட்டை எளிதில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 86 நிமிட நேரம் தேவைப்பட்டது.
லீ நா 3–வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று உள்ளார். இதற்கு முன்பு 2011 மற்றும் கடந்த ஆண்டு இறுதிப்போட்டிக்கு நுழைந்து இருந்தார்.
இதில் 2 முறையும் தோற்று இருந்தார். இந்த முறை அவர் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை முதல் தடவையாக கைப்பற்றுவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லீ நா இறுதிப்போட்டியில் 5–ம் நிலை வீராங்கனை ரட்வன்ஸ்கா (போலந்து) அல்லது 20–ம் நிலை வீராங்கனை டொமினிகா சிபுல்கோவாவை (குரோஷியா) சந்திக்கிறார்.
ஆண்கள் ஒற்றையர் அரை இறுதி ஆட்டத்தில் மோதும் வீரர்கள் வருமாறு:–
1. ரபெல் நடால் (ஸ்பெயின்)– ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து).
2. தாமஸ் பெர்டிச் (செக்குடியரசு)– வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து).
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி