அபிஷேக் பச்சனை மணந்து குழந்தை ஆராத்யா பிறந்த பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தார். மீண்டும் ஐஸ்வர்யா நடிக்க வருவார் என்று பலமுறை தகவல்கள் வெளியானது. ஆனால் அவர் நடிக்கவில்லை, குழந்தை வளர்ப்பில் கவனமாக இருக்க வேண்டி உள்ளதால் இப்போது நடிக்க இயலாது என்று தன்னை தேடி வந்த வாய்ப்புகளை ஏற்க மறுத்துவந்தார். தற்போது ஆராத்யாவுக்கு 2 வயது ஆகிறது. பிளே ஸ்கூல் செல்கிறாள். எனவே ஐஸ்வர்யாவுக்கு ஓய்வு நேரம் கிடைக்கிறது.
இனி நடிப்பில் கவனம் செலுத்தும் முடிவை அவர் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. தனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்களான சஞ்சய் லீலா பன்சாலி, மணிரத்னம் இவர்களில் ஒருவரது படம் மூலம் ரீஎன்ட்ரி தர எண்ணி இருந்தார். அதற்கேற்ப சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய ராம் லீலா படத்தில் அவர் கெஸ்ட் ரோலில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட அழைத்தார்.பாடல் வரிகளில் சில மாற்றங்களை ஐஸ்வர்யா செய்யச் சொன்னபோது பன்சாலி மறுத்துவிட்டார். இதனால் அந்த வாய்ப்பை ஐஸ்வர்யா ஏற்கவில்லை.
தற்போது மணிரத்னம், தான் இயக்கும் புதிய படத்தில் பிரதான வேடம் ஒன்றில் ஐஸ்வர்யாராய் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்று கூறி வருவதுடன் இது பற்றி ஐஸ்வர்யாராயிடம் பேசியதாக தெரிகிறது. அவரும் ரீஎன்ட்ரிக்கு ஓகே சொல்லி இருக்கிறாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி