செய்திகள்,திரையுலகம் 3வது முறையாக இணையும் விஷால்-லக்ஷ்மி மேனன் ஜோடி…

3வது முறையாக இணையும் விஷால்-லக்ஷ்மி மேனன் ஜோடி…

3வது முறையாக இணையும் விஷால்-லக்ஷ்மி மேனன் ஜோடி… post thumbnail image
சென்னை:-பாண்டியநாடு படம் மதுரை மண்வாசனை கதை என்பதால், கிராமத்துக்கு பெண்ணாக நடிக்க கனகச்சிதமாக இருப்பார் என்று லட்சுமிமேனனை விஷாலுக்கு ஜோடியாக்கினார் சுசீந்திரன்.

அப்படம் மெகா ஹிட்டாகி விட்டதால், இப்போது லட்சுமிமேனனை தனது செண்டிமென்ட் நாயகியாக்கி விட்ட விஷால், தான் தயாரித்து நடித்து வரும் நான் சிகப்பு மனிதன் படத்திலும் அவரையே ஒப்பந்தம் செய்திருக்கிறார். இன்னொரு நாயகியாக இனியாவும இருந்தாலும் கதையின் மையம் லட்சுமிமேனனின் கதாபாத்திரத்தை சுற்றித்தான நகர்கிறதாம்.இந்நிலையில், அடுத்து சிங்கம் இயக்குனர் ஹரி இயக்கும் படத்திலும் விஷால் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிங்கம்-2 வுக்குப்பிறகு சூர்யா தம்பி கார்த்தியை வைத்துதான் ஒரு படம் இயக்க திட்டமிட்டிருந்தார் ஹரி. ஆனால், இப்போது கார்த்தி நடிக்கிற படமெல்லாம் சறுக்கக்கொண்டு வருவதால், அந்த சறுக்கலில் நாமும் சிக்க வேண்டாம் என்று நினைத்தாரோ என்னவோ, விஷாலை புக் பண்ணியிருக்கிறார் ஹரி.

ஏற்கனவே அவர்கள் இணைந்த தாமிரபரணி படம் வெற்றி பெற்றதால் பழைய செண்டிமென்டையும் கருத்தில் கொண்டு விஷாலை நடிக்க வைக்கும் ஹரி, அந்த கிராமத்து கதைக்கு லட்சுமிமேனனே சூட்டாக இருப்பார் என்று அவரையே நடிக்க வைக்கும் முடிவில் இருக்கிறாராம். இதுகுறித்து அவரை தொடர்பு கொண்டபோது மறுபடியும் விஷாலுடன் டூயட்டா என்று சந்தோசத்தின் உச்சத்துக்கே சென்று விட்டாராம்.லட்சுமிமேனன். அதோடு, எப்போது, எத்தனை நாள் கால்சீட் என்றாலும் அள்ளித்தர தயாராக இருக்கிறேன் என்றும் அந்த சந்தோச களிப்போடு உறுதி அளித்துள்ளாராம் லக்ஷ்மி மேனன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி