புதுடெல்லி:-கிரிக்கெட்டில் பல்வேறு உலக சாதனைகளை ஏற்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ள சச்சின் டெண்டுல்கர் தனது 200-வது டெஸ்ட் போட்டியுடன் கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி ஓய்வு பெற்றார்.
அதேநாளில், அவரது கிரிக்கெட் சாதனைகளைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.இந்த உயரிய விருதினை வரும் பிப்ரவரி மாதம் 4-ம் தேதி சச்சின் டெண்டுல்கர் பெற உள்ளார்.
டெல்லியில் நடைபெற உள்ள விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதை வழங்கி கவுரவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மிக குறைந்த வயதில் பாரத ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள சச்சின், பாரத ரத்னா விருதை பெறும் 42-வது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி