இந்நிலையில் தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்துள்ளது. கடந்த மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணை விலை 108 டாலராக இருந்தது. தற்போது அது 104 டாலராக குறைந்துள்ளது.இதற்கிடையே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சீரடைந்துள்ளது. இது பெட்ரோல் விலையில் நுகர்வோர்களுக்கு சாதகமான நிலையை எடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.அடுத்த இரு வாரங்களுக்கான பெட்ரோல் விலையை முடிவு செய்ய இந்திய எண்ணை நிறுவனங்களின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பெட்ரோல் விலையை 2 ரூபாய் குறைக்க உள்ளதாக தெரிகிறது. இந்த வார இறுதியில் அது பற்றி தெரிய வரும்.
கடந்த 3–ந்தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 96 பைசாவும், 5–ந்தேதி ரூ.1.79–ம் உயர்த்தப்பட்டது. தற்போது ரூ.2 குறைய வாய்ப்பு கிடைத்துள்ளது.ஆனால் மானிய சுமையை குறைப்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதால் டீசல் விலை வழக்கம் போல உயரும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி