அது போல வரும் பாராளுமன்ற தேர்தல் மிகுந்த எதிர் பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
காங்கிரசுக்கும் அதன் தோழமை கட்சிகளுக்கும் இடையே இடைவெளி அதிகரித்து விட்டதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. நாங்கள் யாரையும் இழக்கவில்லை.மராட்டியம், காஷ்மீரில் எங்கள் கூட்டணி உறுதி படுத்தப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி விவாதிக்கப்பட்டு வருகிறது.
பிரியங்கா என் சகோதரி. அவர் என் நண்பர். காங்கிரசில் அவரும் தீவிர தொண்டராக உள்ளார். என்னையும், கட்சியையும் வலுப்படுத்துவதில், அவர் உதவிகள் செய்து கொண்டிருக்கிறார்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் அவர் தீவிர பிரசாரம் செய்வார். ஆனால் அவர் தேர்தலில் போட்டியிடுவார் என்று நான் நினைக்கவில்லை.இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி