செய்திகள் திருப்பதியில் பக்தர்கள் கேட்டை உடைத்து ரகளை…

திருப்பதியில் பக்தர்கள் கேட்டை உடைத்து ரகளை…

திருப்பதியில் பக்தர்கள் கேட்டை உடைத்து ரகளை… post thumbnail image
திருப்பதி:-திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி, துவாதசி நாளில் தரிசனத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கடந்த 2 நாளில் மட்டும் 2½ லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

கட்டுக்கடங்காத கூட்டத்தாலும், வி.ஐ.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிப்பாலும் சாதாரண பக்தர்கள் தரிசனத்துக்கு காலதாமதமானது. அவர்கள் 12 மணி நேரம் தரிசனத்துக்கு காத்து நின்றனர்.நேற்று இரவு தர்ம தரிசன வரிசையில் உள்ள 28 கம்பார்ட்மெண்டுகளும் நிரம்பி வழிந்தது. மணிக்கணக்கில் பக்தர்கள் கம்பார்ட்டுமெண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர்.
இதனால் பக்தர்கள் பொறுமை இழந்தனர். அவர்கள் தேவஸ்தானத்துக்கு எதிராக கோஷமிட்டனர். ஆனாலும் எந்த பலனும் கிடைக்கவில்லை.ஏகாதசி தரிசனத்துக்கு வந்த தங்களுக்கு துவாதசி தரிசனமும் கிடைக்காமல் போய் விடுமோ என்று கவலைப்பட்டனர்.

9 மற்றும் 15–வது கம்பார்ட்மெண்டு அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த பக்தர்கள் ஆவேசம் அடைந்து ரகளையில் ஈடுபட்டனர். கேட் பூட்டை பலம் கொண்ட தாக்கி உடைத்தனர். பின்னர் அவர்கள் தரிசன வரிசை நோக்கி ஓடினர். இந்த ரகளையில் அறையில் இருந்த டி.வி. உடைந்தது.
கோவில் ஊழியர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி சமரசம் செய்தனர். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தரிசனத்துக்கு அனுமதிப்போம் என்று கூறினர். சுமார் 1 மணி நேரம் சமரச பேச்சுக்கு பிறகு உடைக்கப்பட்ட அறை சரி செய்யப்பட்டது. பக்தர்கள் அந்த அறைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.ஏகாதசி, துவாதசி விழா நேற்று நிறைவடைந்ததை யொட்டி கோவிலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆர்ஜித சேவைகள் இன்று முதல் தொடங்கப்பட்டன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி