ஜெய்ப்பூர்:-பாலிவுட்டின் முன்னணி நடிகை கரீனா கபூர் இம்ரான் கானுடன் தாங்கள் நடித்த கோரி தேரே பியார் மெய்ன் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜெய்பூர் சென்றார்.
அங்கு கரீனாவை பார்த்த ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு கை குலுக்க, புகைப்படம் எடுக்க, ஆட்டோகிராப் வாங்க முந்தியடித்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்த கரீனாவுக்கு கண்ணீர் வந்துவிட்டது. சிலர் அவரை பிடித்துத் தள்ளவும் செய்துள்ளனர்.
பின்னர் அவரது பாதுகாவலர்கள் ஒரு வழியாக ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து கரீனாவை பாதுகாப்பாக அழைத்துச் சென்று காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி