இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டில் 300 காளைகள் கலந்து கொண்டன. அதுபோல இந்த ஆண்டும் 300 காளைகள் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகள் பெயர் பதிவு செய்வது இன்று தொடங்கியது. மாடுகளை பதிவு செய்ய மாடுகளின் உரிமையாளர்கள் இன்று காலை முதலே அவனியாபுரம் போலீஸ் நிலையம் முன்பு குவிய தொடங்கினர். இன்று மட்டும் 150 பேர் வரிசையில் நின்று துணை வட்டாட்சியர் சுரேசிடம் மாடுகளின் படத்தை காட்டி பதிவு செய்தனர்.அதுபோல மாடுபிடி வீரர்களின் பெயர்கள் பதிவு செய்யும் நிகழ்ச்சி கிராம நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது. மாடுபிடி வீரர்கள் சுமார் 200 பேர் வரிசையில் நின்று பெயர்களை பதிவு செய்தனர்.
கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றபோது பார்வையாளர்கள் அமர்ந்து இருந்த மேடை சரிந்து விழுந்தது. இந்த ஆண்டு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தடுப்பு வேலிகள், மேடைகள் சிறப்பான முறையில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.ஜல்லிக்கட்டு விழா 14–ந்தேதி காலை 8 மணி முதல் 2 மணி வரை நடத்தப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி