செய்திகள்,திரையுலகம் ஒரே அறையில் தங்கிய ஹீரோ-ஹீரோயின்…

ஒரே அறையில் தங்கிய ஹீரோ-ஹீரோயின்…

ஒரே அறையில் தங்கிய ஹீரோ-ஹீரோயின்… post thumbnail image
சென்னை:-விஷாலும், லட்சுமி மேனனும் இணைந்து நான் சிவப்பு மனிதன் படத்தில் மீண்டும் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பில் இருவருக்கும் கெமிஸ்ட்ரி பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகிவிட்டதாக படக்குழுவினர்களே பரபரப்பாக கிசுகிசுத்து வருகின்றனர்.

இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்றுக்காக கோவா, குலுமணாலி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தினார்கள். கோவாவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியபோது இருவருக்கும் தனித்தனியே அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும் விஷால் லக்ஷ்மி அறையில்தான் பெரும்பாலும் காணப்பட்டாராம். இரவு நெடுநேரம் வரை கடலை போட்டுவிட்டு அதிகாலையில்தான் தனது அறைக்கு திரும்புகிறாராம். விஷாலே தயாரிப்பாளராகவும் இருப்பதால் அவரை கேள்வி கேட்க இயக்குனராலும் முடியவில்லை.

இயக்குனர் இவர்களுடைய கெமிஸ்ட்ரியை தனது படத்தில் எப்படி சரியாக உபயோகிப்பது என்ற சிந்தனையில் இருக்கின்றாராம். ராஜா ராணியின் விளம்பரத்திற்காக ஆர்யா, நயன்தாரா திருமண கிசுகிசு போல ஏதாவது ஒரு வித்தியாசமான, கிசுகிசுவை கிளப்பிவிட தனது உதவியாளர்களிடம் ஐடியா கேட்டுள்ளாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி