நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடும் இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.உள்ளூர் போட்டியான ரஞ்சி டிராபியிலும் அவரால் சிறப்பாக விளையாட முடியவில்லை. இதனால் தான் தேர்வு குழு அவரை தொடர்ந்து ஓரம் கட்டி வருகிறது.கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2–வது டெஸ்ட் போட்டிக்கு பிறகு ஷேவாக் நீக்கப்பட்டார். கடந்த ஜனவரி மாதமே ஒருநாள் போட்டியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.
ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று கருதி இருந்த ஷேவாக்குக்கு தற்போது டெஸ்ட் அணியிலும் அதே நிலை தான் உள்ளது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா இழந்தாலும் தொடக்க வீரர்களில் முரளிவிஜய் நன்றாக ஆடினார். ஷிகார் தவானும் நன்றாக ஆடக்கூடியவர்.
இதனால் ஷேவாக் இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவது என்பது அவ்வளவு எளிதல்ல.
இதனால் ஷேவாக் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான மனநிலையிலும் அவர் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. யாரும் கட்டாயப்படுத்தி அவர் ஓய்வு முடிவை எடுக்க மாட்டார்.
அதற்கான மன நிலையில் இருப்பதால் விரைவில் ஷேவாக் ஓய்வு முடிவை அறிவிக்கலாம் என்று தெரிகிறது.35 வயதான ஷேவாக் 104 டெஸ்டில் விளையாடி 8586 ரன் எடுத்துள்ளார். சராசரி 49.34 ஆகும். 23 சதமும், 32 அரை சதமும் அடித்துள்ளார்.2 முறை டிரிபிள் செஞ்சூரி அடித்த சாதனை வீரர் அவர். 2004–ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் 309 ரன்னும், 2008–ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான சென்னை டெஸ்டில் 319 ரன்னும் குவித்தார். 40 விக்கெட் எடுத்துள்ளார்.251 ஒருநாள் போட்டியில் விளையாடி 8273 ரன் எடுத்துள்ளார். சராசரி 35.05 ஆகும். 15 சதமும், 38 அரைசதமும் அடித்துள்ளார்.
ஒரு ஆட்டத்தில் அதிக ரன் எடுத்த சாதனையாளர் ஆவார். 2011–ம் ஆண்டு வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான இந்தூர் ஒருநாள் போட்டியில் 219 ரன்கள் குவித்தார். தென்டுல்கருக்கு அடுத்தப்படியாக இரட்டை சதம் அடித்த 2–வது வீரர் என்ற பெருமையை பெற்றார். 96 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி