“நாடோடிகள்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அனன்யா. தொடர்ந்து சீடன், எங்கேயும் எப்போதும் படங்களில் நடித்தவர் சிறிய இடைவெளிக்கு பிறகு நடித்துள்ள படம் “புலிவால்”.
விமல் ஜோடியாக அனன்யா நடித்துள்ளார். இருவரும் ஒரு சூப்பர் மார்கெட்டில் வேலை பார்க்கும் ரோலில் நடித்துள்ளனர். பிரசன்னாவுக்கு ஜோடி ஓவியா. இவர்களை தவிர தம்பி ராமையா, சூரி, இனியா, சொர்ணமால்யா போன்ற பலரும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஹயாத் ஹோட்டலில் நடைபெற்றது. மாலை பத்திரிகையாளர் சந்திப்பு நடை பெற்றது. இதில் கலந்து கொள்ள அனன்யா, இனியா இருவருமே தவிர்த்து விட்டனர். காரணம் பத்திரிகையாளர்களை சந்தித்தால் அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிருக்கும்என்று கூறினார்.
ஆனால், உண்மையான காரணத்தை கேட்டபோது இனியாவிற்கு பெரிய ரோல் தருவதாக கூறி, இயக்குனர் சின்ன ரோலில் நடிக்கவைததாகவும், அனன்யாவுக்கு 8 நாள் தான் கால்ஷீட் என்றாலும், அவரை நடிக்க வைக்க குழுவினர் படாத பாடுபட்டுள்ளனர், கோயில், மாந்திரீகம் என்று அனன்யா சுத்தமாக மாறி விட்டாராம். ஆஞ்சனேயன் உடன் இருந்து கொண்டு கோயில்களுக்கு சென்று வருவதாகவும், நிறைய கயிறுகள் கட்டி இருப்பதாகவும் சொல்கின்றனர், நல்ல நடிகை,இப்படி இருந்தால் எப்படி இவரால் தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடிக்க முடியும், எப்படி இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று வருத்தப்படுகின்றனர் சினிமா துறையில் இருப்பவர்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி