தூத்துக்குடி:-தூத்துக்குடி புதுக்கோட்டையில் இருந்து திரேஸ்புரத்திற்கு காலை அரசு பஸ் சென்றது. தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்புள்ள பஸ் நிறுத்தத்தில் ஏராளமான மாணவர்கள், பொதுமக்கள் பஸ் ஏறுவதற்காக நின்றனர்.
பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் சென்றார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் பஸ்சின் மீது கற்களை எறிந்தனர். இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. மேலும் மாணவர்கள் அனைவரும் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது பஸ் கண்டக்டர், பஸ்சில் அதிகம் கூட்டம் இருந்ததால் நிற்கவில்லை. கூடுதல் ஆட்களை ஏற்றினால் படிக்கட்டில் தொங்கி வருவார்கள். இதனால்தான் நிறுத்தாமல் சென்றேன் என்றார்.
மாணவர்கள் கூறும் போது, பஸ்சை நிறுத்தாமல் செல்வதால் எங்களுக்கு பள்ளிக்கு சரியாக நேரத்தில் செல்ல முடிவதில்லை. எனவே கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி