சமீபத்தில் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில், நான் இளையதளபதி விஜய்யுடன் ஜாலியாக ஆடிப்பாடி பொழுதை போக்கிகொண்டு இருப்பதாகவும், கூடவே ‘ஐ லவ் யூ ப்ரோ’ என்றும் ஒரு தகவலை டுவிட்டரில் வெளியிட்டார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் உடனே தனுஷிடம் அப்படியென்றால் விஜய்யை எங்களுக்கு ஒரு ‘ஹாய்’ சொல்லச் சொல்லுங்க என்று சொன்னதும், ரசிகர்களுக்கு உண்மை உணர்த்தும் வகையில் சில நிமிடங்களில் தன்னுடன் விஜய்யும் இணைந்து நிற்கும் படத்தை வெளியிட்டார் தனுஷ்.
அதில் தனுஷிற்கு பின்னால் விஜய் நின்றுக்கொண்டு, ரசிகர்களுக்கு ஹாய் சொல்வது மாதிரி இருந்தது. அதன் கீழே தனுஷ் உங்களைப்போல பல ரசிகர்கள் கேட்டதற்காக விஜய் இப்போது உங்களுக்கு லைவ் ஆக ”ஹாய்” சொல்கிறார்” என்று டுவிட்டரில் கூறியிருந்தார். விஜய், தனுஷின் இந்த நட்பு இருவரது ரசிகர்களிடமும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி