திரையுலகம் “ஐஸ்” வைக்கும் சிம்ரன்…

“ஐஸ்” வைக்கும் சிம்ரன்…

“ஐஸ்” வைக்கும் சிம்ரன்… post thumbnail image
திருமணத்திற்கு பின் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் இல்லாததால், சின்னத் திரையில், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார், சிம்ரன்.

. இருப்பினும், சினிமா ஆசை அவரை விடவில்லை. தனக்கு யாரும் வாய்ப்பு தர முன்வராததால், தானே சொந்தமாக படம் தயாரித்து, இயக்கி, அதில் தானும், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கும் முடிவில் இருக்கிறார் சிம்ரன்.

இந்த படத்திற்கு முன்னணி நடிகர்கள் யாரையாவது, ஒப்பந்தம் செய்யலாம் என்று அவர் முயற்சி எடுத்தபோது, யாருமே ஒப்பந்தம் ஆகவில்லை. அதனால், ஒரு புதுமுக நடிகரை வைத்து, படம் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார் சிம்ரன்.

ஆனால், படத்தை வியாபாரம் செய்ய, ஒரு முன்னணி நடிகை வேண்டுமே என்று யோசித்த அவர் சில மாதங்களுக்கு முன்பே ஹன்சிகாவை டிக் செய்து வைத்து விட்டார். முதலில் புதுமுக ஹீரோ படம் என்றதும், ஹன்சிகா நடிக்க தயங்கினார். பின்னர், ஹன்சிகாவை, ஆஹா, ஓஹோவென புகழ்ந்து, ஐஸ் வைத்து,சிம்ரன் சம்மதம் வாங்கி இருக்கிறார்.

.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி