ஆந்திராவில் விசாகப்பட்டினம் மாவட்ட சத்தியவரம் பகுதியில் இருந்து வேனில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து எச்சரிக்கையடைந்த போலீசார், மடுகுலாவிலிருந்து விசாகப்பட்டிணம் நோக்கி வந்த சந்தேகத்திற்கிடமான வேனை இடைமறித்து சோதனையிட்டனர்.
அப்போது தேங்காய்களுக்கு இடையே சாக்கு மூட்டையில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட ஒரு டன் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் சந்தை மதிப்பு 50 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த கடத்தலில் ஈடுபட்ட மடுகுலாவை சேர்ந்த வி. ராமகிருஷ்ணா என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி