செய்திகள் கள்ளச்சாரயம் குடித்து “16” பேர் பலி…

கள்ளச்சாரயம் குடித்து “16” பேர் பலி…

கள்ளச்சாரயம் குடித்து “16” பேர் பலி… post thumbnail image

இந்தோனேசியாவில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. இதன் முக்கியத்தீவான ஜாவா தீவின் கிழக்கில் உள்ள மொஜோகெர்டோ பகுதியில் புதுவருடப்பிறப்பிற்கு முந்தைய நாள் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை நிறைய பேர் அருந்தியுள்ளனர்.

இதை அருந்திய சில நிமிடங்களிலேயே பலர் மயங்கிவிழுந்தனர். பின்னர் உயிருக்கு போராடிய அவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளி முதல் இதுவரை அங்கு 16 பேர் உயிரிழந்துள்ளனர். 9 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த மதுபானத்தை தயாரித்து சாலையோர கடைகளில் விற்றதாக ஒரு ஜோடியினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பனைமரச்சாறு அல்லது சாதத்துடன் மெத்தனாலை சேர்த்து இந்த மதுபானத்தை உருவாக்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இதுபோன்று சுற்றுலா நகரமான பாலிதீவில் பனைமரச்சாறுடன் மெத்தனால் சேர்த்து உருவாக்கப்பட்ட மதுபானத்தை அருந்தி கடத்த 2009-ம் ஆண்டு 4 வெளிநாட்டுக்காரர்கள் உள்பட 25 பேர் இறந்தன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி