கொழும்பில் இருந்து வந்த விமானத்தை கண்காணித்தபோது அதில் வந்த இலங்கையைச் சேர்ந்த “ஐத்ரோஸ்” என்பவரின் சூட்கேசை சந்தேகத்தின்பேரில் திறந்து பார்த்தபோது “400” கிராம் தங்கம் டார்ச்லைடில் இருந்ததை பறிமுதல் செய்தனர்.
அதே விமானத்தில் வந்த இலங்கையைச்சேர்ந்த “காசிம்முகமது” வயது 30 என்பவரின் சூட்கேசில் இருந்த “மிக்சியை” திறந்து பார்த்தபோது அதன் அடியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த “1/2” கிலோ தங்கம் இருந்ததை பறிமுதல் செய்தனர்.
சிங்கப்பூரில் இருந்து கொழும்பு வழியாக சென்னை வந்த “ஐயாத்அலி” என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். தன்னிடம் எதுவும் இல்லை என கூறினார். அவரது சூட்கேசிலும் எந்தவித பொருளும் இல்லை. ஆனால் அவரது நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட சுங்க இலாகாஅதிகாரிகள் “மருத்துவ ஸ்கேன்” எடுத்து பார்த்தபோது, அவரது “வயிற்றில் 15 மாத்திரைகள்” இருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை டாக்டர்கள் உதவியுடன் வெளியே எடுத்தனர். அவற்றில் தங்கத்தை குண்டுகள் போல் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். சுமார் “300” கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும், கொழும்பில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் வந்த கண்டியைச்சேர்ந்த “முகமது”, “அமீது” ஆகியோரின் சூட்கேசை திறந்து பார்த்தபோது 2 பேரிடமும் இருந்து “600” கிராம் தங்கம் இருந்தது அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். .
கொழும்பில் இருந்து சிங்கப்பூர் வழியாக சென்னை வந்த விமானத்தில் வந்த இலங்கை யாழ்பாணத்தைச்சேர்ந்த “சசிதரன்” என்பவரின் “ஆசனவாய்” பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட “300” கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். 6 பேரிடமும் இருந்து ரூ.65 லட்சம் மதிப்புள்ள “2 கிலோ 100” கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். பிடிபட்டவர்களை தங்கக் கடத்தலில் ஈடுபடுத்தியது யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி