நாம் எவ்வளவு முன்னெச்சரிகையுடன் இருந்தாலும் கூட நம் வீட்டில் நோய் நுண் கிருமிகள் என்பது இருக்கும். சில இடங்களில் இந்த கிருமிகள் தேங்கி இவைகளை அழிக்க பயன்படுத்தப்படும் சுத்தம் செய்யும் மருந்து அல்லது இரசாயன நச்சு பொருட்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கும். தொந்தரவு தரும் இவ்வகையான நோய் நுண் கிருமிகளால் வீட்டில் பல இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரி பாக்டீரியா மற்றும் வைரஸ்களை கொண்ட நோய் நுண் கிருமிகள் தங்கி உள்ள இடங்கள்
சில சமயங்களில் நாம் நம் துணிகளை தொடர்ந்து துவைப்பதில்லை.அத்தகைய துணிகள் நம் அறை மூலையிலும் அல்லது குளியலறையின் மூலையிலும் குவிந்து கிடக்கும். இந்த துணிகள் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் கொண்ட நோய் நுண் கிருமிகளால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. குவிக்கப்பட்ட அழுக்கு துணிகள் மற்றும் தேய்க்க வேண்டிய துணிகளிலும் தங்கி பெருகுகிறது, இதனால் இது கிருமிகளால் பாதிக்கப்பட்ட இடமாக வீடுகளில் உள்ளது. எப்பொழுதும் துணிகளை தொடர்ந்து துவைப்பது நல்லது, அதுவும் வியர்வை மற்றும் அழுக்கான துணிகளை உடனே துவைப்பது மிகவும் நல்லது.
கழிப்பறைகள் மற்றும் குளியலறைகளை நாம் எவ்வளவு தான் சுத்தம் செய்து, இரசாயன மருந்துகளை பயன்படுத்தினாலும் கூட அது கிருமிகளை அழிப்பதற்கு போதுமானதாக இருப்பதில்லை. சில மூலை இடுக்குகள் இந்த நோய் நுண் கிருமிகளால் பாதிக்கப்பட்டு சுத்தம் செய்யபடாமல் இருக்கின்றன. துண்டுகள் (டவல்) நோய் நுண் கிருமிகளால் பாதிக்கப்படுவதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளன. கழிப்பறை இடங்கள் நோய் நுண் கிருமிகளால் முக்கியமாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. அதை கவனமாக சுத்தம் செய்தால் நோய் நுண் கிருமிகளில் இருந்தும் தொற்று நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம்.
நோய் நுண் கிருமிகளால் பாதிக்கப்படும் முக்கியமான பொருட்களில் ஒன்றாக விளங்குகிறது டூத் ப்ரஷ். டூத் பிரஷ் என்பது நேரடியாக நம்மால் உபயோகிக்கப்படும் ஒரு பொருள். இது நோய் நுண் கிருமிகளால் பாதிக்கப்பட்டு நமக்கு எளிதில் நோயை பரப்பும். எனவே டூத் பிரஷை தினசரி உபயோகத்திற்கு பிறகு மூடி வைப்பது நல்லது. .
துணி துவைக்க உதவும் பால்கனி, பாத்திரங்கள், இன்ன பிற பொருட்கள் போன்றவைகளையும் வீட்டில் கிருமிகளால் பாதிக்கப்பட்ட இடங்களே. பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் சுத்தம் இல்லாத துணி மற்றும் பாத்திரத்துடன் சேர்ந்து எல்லா இடத்தையும் பாதிக்கிறது. சுத்தம் செய்ய பயன்படும் சோப்பு நுரை, சுத்தம் செய்ய உதவும் ப்ரஷ், இன்ன பிற பொருட்கள் பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் பாதிக்கப்படுகிறது. இந்த உபகரணங்களை நன்கு சுத்தம் செய்து அதன் பின் உபயோகிக்க வேண்டும். பாக்டீரியா மற்றும் வைரஸ்களை ஒழிக்க பயன்படுத்தப்படும் இரசாயன பொருட்களை உபயோக்கிக்கும் இடமும் சுத்தமாக இருக்க வேண்டும்.
குப்பைத் தொட்டியை சுற்றி உள்ள இடமே ஒரு வீட்டில் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் போன்ற நுண் கிருமிகளால் மிகவும் பாதிக்கப்படும் இடம். . இதுவே பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் போன்ற நுண் கிருமிகள் இனபெருக்கம் செய்ய சிறந்த இடமாக உள்ளது. எனவே தினமும் குப்பைத் தொட்டியில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்து, அதை சுற்றி இருக்கும் இடத்தில் குப்பைகள் சேராமலும் அகற்ற வேண்டும். இடத்தை சுத்தமாகவும், தேவை இல்லாத குப்பைகள் சேராமலும் பார்த்துக் கொள்ளவும். அதே போல் குப்பைத் தொட்டியை மூடியும், சரியான இடைவெளியில் சுத்தம் செய்தும் வைக்க வேண்டும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி