கத்தரிக்காய் அன்றாடச் சமையலில் இடம் பெறும் மிக முக்கியமான காய் கத்தரி. இதில் பாஸ்பரஸ், ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி, சி போன்றவை உள்ளன. இது ரத்தத்தை சுத்தப்படுத்தும். மூளை வளர்ச்சிக்கும், நினைவாற்றலுக்கும் உதவும்.
பீன்ஸ் பீன்ஸ் காயில் புரதச்சத்தும் கால்சியம் சத்தும் அதிகம் உள்ளது. இரும்புச்சத்துடன், உயிர்சத்துக்களான ஏ,பி,சி ஆகியவை உள்ளன. இதனால் எலும்பு வளர்ச்சியடையும், உடல் உறுதிப்படும்.
சௌ சௌ புது விதமான வடிவத்தில் இருக்கும் சௌ சௌ காய் சாம்பாரிலும், கூட்டு செய்யவும் அதிகம் பயன்படுகிறது. இதில் கால்சியம், பாஸ்பரஸ், போன்ற சத்துக்களும், வைட்டமின் பி,சியும் காணப்படுகின்றன. இது எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
பூசணிக்காய் பச்சடி, கூட்டு செய்யப் பயன்படும் கொடி வகை காயான பூசணியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளன. மேலும் வைட்டமின் ஏ, பி போன்றவையும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்களும் காணப்படுகின்றன. இது இரத்தத்தை விருத்தி செய்யும். வெள்ளரிக்காய் சமைக்காமல் சாப்பிடும் காயான
வெள்ளரிக்காயில் ஃபோலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ், போன்றவை காணப்படுகின்றன. தவிர இதில் வைட்டமின் பி, சி யும் உள்ளன. வெள்ளப்பிஞ்சானது தாகத்தை தணிக்கும். உணவை எளிதில் ஜீரணமாக்கும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி