செய்திகள்,முதன்மை செய்திகள் இலவசமாக குழந்தை பெற இங்கிலாந்து செல்லும் பெண்கள் …

இலவசமாக குழந்தை பெற இங்கிலாந்து செல்லும் பெண்கள் …

இலவசமாக குழந்தை பெற இங்கிலாந்து செல்லும் பெண்கள் … post thumbnail image
இங்கிலாந்து:-பிரிட்டனுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.இதற்காக பல்வேறு சலுகைகளையும் அரசு அறிவித்துள்ளது, குறிப்பாக சுற்றுலா வரும் கர்ப்பிணி பெண்கள் வந்த இடத்தில் பிரசுவித்தால் அரசே செலவை ஏற்றுக் கொள்ளும், இதற்காக 20 கோடி ரூபாய் செலவு செய்கிறது.

இதை அறிந்த அண்டை நாடுகளின் கர்ப்பிணி பெண்கள், நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது சுற்றுலா விசாவில் பிரிட்டன் வந்து விடுகின்றனர்.ஏனெனில் பிற ஐரோப்பிய நாடுகளில் உள்ள மருத்துவமனைகளில் பிரசவத்திற்கு நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதற்கு பயந்து பிரிட்டனுக்கு வந்து விடுகின்றனர்.

சமீபத்தில் ருமேனியா, பல்கேரியா மற்றும் மேற்கு ஆப்ரிக்காவின் சில நாடுகளைச் சேர்ந்த 300 நிறைமாத கர்ப்பிணிகள் விமானங்களில் லண்டன் வந்து இறங்கினர்.இவர்களை தடுத்து நிறுத்திய விமான நிலைய அதிகாரிகள், மருத்துவர்களை கொண்டு பரிசோதனை நடத்தினர்.
அப்போது பெரும்பாலானவர்கள் 36 வார கர்ப்ப காலத்தை தாண்டியவர்கள் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து குறித்த பெண்களை சொந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பிவிட்டனர்.மேலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான பிரசவ விதிமுறைகளில் மாற்றம் செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி