இதர பிரிவுகள்,முதன்மை செய்திகள் பழங்கள் “ஸ்வீட்” சமையல் !!!…

பழங்கள் “ஸ்வீட்” சமையல் !!!…

பழங்கள் “ஸ்வீட்” சமையல் !!!… post thumbnail image
உங்கள் குழந்தைகளுக்கு பழங்கள் கொடுக்கும் போது வேண்டாம் என்று சொல்கிறார்களா? இதை, தயார் செய்து கொடுத்து பாருங்கள் வேண்டாம் என்ற குழந்தைகளும் விரும்பி சாப்பிடும்.

மாதுளை டெஸர்ட்

மாதுளை – ஒன்று
ராஸ்பெர்ரி – 10
கன்டண்ஸ்ட் மில்க் – 2 தேக்கரண்டி
ஃப்ரஷ் க்ரீம் – ஒரு கப்
சாக்லேட் வெர்மிசெலி – சிறிது
சீனி – 4 மேசைக்கரண்டி

ஒரு கண்ணாடி கிளாஸில் முதலில் மாதுளை முத்துக்களை போடவும்.பின்பு அதில் அரை கப் ஃப்ரஷ் க்ரீம், 2 மேசைக்கரண்டி சீனி, ஒரு மேசைக்கரண்டி கன்டண்ஸ்ட் மில்க் சேர்த்து ராஸ்பெர்ரியை மேலாக போடவும்.இதே போல் மேலும் ஒரு அடுக்கு செய்யவும். மேலே சிறிது சாக்லேட் வெர்மிசெலியை தூவி அலங்கரிக்கவும்.சுவையான எளிதில் செய்யக் கூடிய மாதுளை டெஸர்ட் ரெடி. ராஸ்பெர்ரி கிடைக்கவில்லை எனில் ஆப்பிள், வாழைப்பழம் சேர்த்தும் செய்யலாம்.

வாழைப்பழ போண்டா

பழுத்த வாழைப்பழம் – ஒன்று (பெரியது)
சீனி – 4 தேக்கரண்டி
மைதா – ஒரு கப்
ரவை – ஒரு மேசைக்கரண்டி
கார்ன் ஃப்ளார் – ஒரு தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் – ஒரு சிட்டிகை
உப்பு – ஒரு சிட்டிகை
எண்ணெய் – பொரிக்க

வாழைப்பழத்தை தோலுரித்து நன்றாக மசித்து எடுத்துக் கொள்ளவும்.அதனுடன் மைதா, ரவை, கார்ன் ஃப்ளார், பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு சேர்க்கவும்.அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிசைந்த மாவை உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். (ரவை மற்றும் கார்ன் ஃப்ளார் சேர்ப்பதால் இது அதிகமாக எண்ணெய் குடிக்காது).எளிதில் செய்யக் கூடிய சுவையான வாழைப்பழ போண்டா தயார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி