செய்திகள்,முதன்மை செய்திகள் இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகார் கூறும் பெண் ஏட்டு…

இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகார் கூறும் பெண் ஏட்டு…

இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகார் கூறும் பெண் ஏட்டு… post thumbnail image
மதுரை: – கொடைக்கானல் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிபவர் கீதா. இவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு காவல்துறையில் 1997ல் இரண்டாம் நிலை பெண் காவலர் பணியில் சேர்ந்தேன். எனக்கு திருமணமாகி கணவர், 2 மகள்கள் உள்ளனர்.

2008ம் ஆண்டு டிசம்பரில் முதல் நிலை ஏட்டாக பதவி உயர்வு பெற்று, அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டேன். கணவர், குழந்தைகள் நெல்லையில் வசித்தனர். அருப்புக்கோட்டையில் ஏட்டாக இருந்தபோது, இன்ஸ்பெக்டராக இருந்த ஆவுடையப்பன் எனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார். என்னை மிரட்டி பலாத்காரம் செய்தார். அவர் மேலூர் காவல் நிலையத்தில் தற்போது பணிபுரிகிறார்.நான் கொடைக்கானல் காவல்நிலையத்திற்கு மாறுதல் செய்யப்பட்டு, கம்ப்யூட்டர் பயிற்சிக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். இதையறிந்த ஆவுடையப்பன் சென்னைக்கு வந்து பட்டினப்பாக்கத்தில் உள்ள ஓட்டலுக்கு அழைத்து சென்று அங்குள்ள அறையில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்தார்.

இதற்கிடையே, ஆவுடையப்பன் என்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்வது என் கணவருக்கு தெரியவந்தது. அவர் என்னை வீட்டை விட்டு விரட்டிவிட்டார்.கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி மதுரை வந்த என்னை ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து டிசம்பர் 4 வரை 3 மாதகாலம் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தினார். ஆவுடையப்பனின் கொடுமை எல்லை மீறவே, அவர் மீது மதுரை எஸ்பியிடம் புகார் அளித்தேன். எஸ்பி விசாரித்தார். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. ஆவுடையப்பனின் பாலியல் கொடுமைகள் குறித்து விசாரிக்க தனி குழு அமைக்கவும், அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.மனுவை நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் விசாரித்தார். மனுவுக்கு நான்கு வாரத்தில் பதிலளிக்க உள்துறை செயலாளர், டிஜிபி, ஐஜி, மதுரை எஸ்பி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி