முதன்மை செய்திகள்,விளையாட்டு ஏலம் போவாரா சேவாக்…

ஏலம் போவாரா சேவாக்…

ஏலம் போவாரா சேவாக்… post thumbnail image
புதுடில்லி:- இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் சேவக், 35. டெஸ்ட் (319 ரன்கள்), ஒரு நாள் (219) போட்டிகளில் அதிக ரன் எடுத்தவர். மோசமான ‘பார்ம்’ காரணமாக, கடந்த 2013, மார்ச் முதல் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த ஆண்டு பங்கேற்ற ரஞ்சி சீசனில், 13 இன்னிங்சில் 234 ரன்கள் (சராசரி 19.50) தான் எடுத்தார். இந்நிலையில்,ஏழாவது பிரிமியர் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம், வரும் பிப்., 12, 13ல் நடக்கவுள்ளது.இதற்கு முன், ஒவ்வொரு அணி நிர்வாகமும், எந்தெந்த வீரர்களை தக்க வைக்கின்றன என்ற விவரத்தை, ஜன.,10ம் தேதிக்குள் வெளியிட வேண்டும். இதில், சேவக் டில்லி அணியில் இருந்து வெளியேற்றப்படலாம் எனத் தெரிகிறது.

ஏனெனில், இவரை தக்கவைக்கும் பட்சத்தில், ரூ. 12.5 அல்லது ரூ. 9 கோடி சம்பளம் தரவேண்டும். 35 வயதான சேவக் மோசமான ‘பார்மில்’ உள்ளதால், இவ்வளவு தொகை கொடுக்க, அணி நிர்வாகம் தயங்குகிறது. இவருக்குப் பதில், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் தக்கவைக்கப்பட்டு, ‘ஜோக்கர் கார்டு’ முறையில் சேவக்கை ஏலத்தில் எடுக்கலாம். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், சேவக் குறைந்த தொகைக்குத் தான் வாங்கப்படுவார். ஒருவேளை அணி நிர்வாகம் விரும்பவில்லை எனில், இவரை யாரும் விலைக்கு வாங்காத நிலை ஏற்படும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி