சென்னையில் 16 ஆயிரம் ஆட்டோக்கள் எவ்வித நடவடிக்கைக்கும் உள்ளாகாதவை என “காவல்துறை ஆணையர் ஜார்ஜ்” தெரிவித்தார்.
இது, குறித்து காவல்துறை ஆணையர் ஜார்ஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில் போக்குவரத்து போலீசாரின் நடவடிக்கைக்கு உட்படாத ஆட்டோகளுக்கு சிறப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படும். விதிமுறைக்கு உட்பட்டு இயக்கப்படும் ஆட்டோ ஓட்டுநர்களை ஊக்கவிக்கும் நடவடிக்கை இது என்றும், சென்னையில் ஓடும் 70,000 ஆட்டோக்களில் 15 சதவீதம் மட்டுமே மீட்டர் போடாமல் இயக்கப்படுகிறது என்றார்.
மேலும் மீட்டர் போட்டு ஓட்டும் ஆட்டோக்களில் நீல நிற ஸ்டிக்கர் ஒட்டப்படும் என்றும் நீல நிற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட ஆட்டோக்கள் அடிக்கடி சோதனை செயப்பட மாட்டாது என்றும் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி