செய்திகள்,முதன்மை செய்திகள் அபராதம் கட்ட சொன்னதால் சாலை மறியல் …

அபராதம் கட்ட சொன்னதால் சாலை மறியல் …

அபராதம் கட்ட சொன்னதால் சாலை மறியல் … post thumbnail image
சென்னை:-சென்னையில் வரைமுறைப்படுத்தப்பட்ட ஆட்டோ கட்டணம் கடந்த ஆகஸ்டு மாதம் 25–ந் தேதி நடைமுறைக்கு வந்தது. இதன்படி முதல் 1.8 கி.மீட்டருக்கு கட்டணமாக ரூ.25–ம், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12 கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கட்டாயம் மீட்டர் போட்டு ஓட்ட வேண்டும் என்றும், இதனை கடைபிடிக்காத ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்தனர்.
இதனை ஆட்டோ டிரைவர்கள் சரியாக கடைபிடிப்பதில்லை என்று பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை மாநகரம் முழுவதும் 100 இடங்களில் பொதுமக்களின் வசதிக்காக உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களின் அருகில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையங்களில் பேனர்கள் கட்டப்பட்டு அதில் போன் நம்பர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த உதவி மையங்களுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. மீட்டர் போடாத ஆட்டோ டிரைவர்கள், சவாரிக்கு வர மறுப்பவர்கள் ஆகியோரை பொதுமக்கள் பிடித்து கொடுக்கிறார்கள். ஒவ்வொரு உதவி மையங்களிலும் சுமார் 100 புகார்கள் வரை வருகிறது. நேற்று பகலில் அங்கிருந்து ஓட்டேரி செல்வதற்காக நடராஜன் என்ற பயணி காத்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்திய அவர் மீட்டர் போட்டு ஓட்டேரிக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆனால் ஆட்டோ டிரைவர் ராமமூர்த்தி சவாரிக்கு வர மறுத்துள்ளார். இதுபற்றி அருகில் பணியில் இருந்த எழும்பூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயனிடம், நடராஜன் புகார் செய்தார்.

உடனே அவர் ராமமூர்த்தியை அழைத்து சவாரிக்கு செல்ல மறுப்பது மோட்டார் வாகன சட்டம் 192–ஏ பிரிவின்படி குற்றமாகும் என்று கூறி ரூ.2,500 அபராதம் விதித்தார். அதற்கான ரசீதையும், இன்ஸ்பெக்டர் விஜயன், டிரைவர் ராமமூர்த்தியிடம் கொடுத்தார்.இதனால் ஆத்திரம் அடைந்த ராமமூர்த்தி, அபராதத்தை செலுத்தாமல் திடீரென சட்டையை கழற்றி நடுரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அந்த வழியாக வந்த வாகனங்களின் முன்னாலும் திடீரென அவர் பாய்ந்தார். இதனால் ரெயில் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் எழும்பூர் சட்டம்–ஒழுங்கு போலீசார் அங்கு விரைந்து வந்து ராமமூர்த்தியை சமாதானம் செய்தனர். சுமார் 10 நிமிடம் அவர் சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் டிரைவர் ராமமுர்த்தியிடம் ஆட்டோ ஒப்படைக்கப்பட்டது. அவர் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டார்இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘வழக்கமாக இதுபோன்ற நேரங்களில் சம்பந்தப்பட்ட ஆட்டோ டிரைவர் ஆர்.சி.புத்தகம், லைசென்ஸ் ஆகியவற்றை காட்டி அபராதம் கட்டித்தான் ஆட்டோவை எடுக்க முடியும். ஆனால் டிரைவர் ராமமூர்த்தியிடம் மனிதாபிமான அடிப்படையில் ஆட்டோ ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் நிச்சயம் அபராதம் கட்ட வேண்டும். இல்லை என்றால் கோர்ட்டு மூலம் அபராதத் தொகை வசூலிக்கப்படும் என்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி