அதன் பிறகு குமார் பெற்றோர் வீட்டுக்கு செல்லவில்லை. அவர்கள் அழைத்தாலும் போக மறுத்தார். இதனால் குமாரின் தாய் கமலம் ஈத்தாமொழி போலீசில் புகார் செய்தார். அதில், மகன் குமாரை அவரது அத்தை தன்னோடு தங்க வைத்துள்ளார். எங்களுடன் அனுப்ப மறுக்கிறார். அவரிடம் இருந்து மகனை மீட்டுத்தர வேண்டும் என்று கூறி இருந்தார்.புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் இது பற்றி சீதா வீட்டிற்கு சென்று விசாரித்த
போலீசாரே தலைசுற்றி கீழே விழுந்து விட்டனர்அதன் விவரம்,
குமார் உடல்நலமின்றி சீதா வீட்டுக்கு சென்றது முதல் அவரை சீதா அக்கறையாக பார்த்துக்கொண்டார். இரவிலும் கண் விழித்து மருமகனுக்கு தேவையான உதவிகளை செய்தார். ஒருநாள் வேலை விஷயமாக கணவன் வெளியூர் சென்றிருந்தார். அன்றிரவும் குமாருக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொடுத்த சீதாவுக்கு திடீரென விபரீத எண்ணம் தோன்றியது.அவர், குமார் அருகில் சென்று படுத்துக்கொள்ள அவர்களுக்கு இடையே அத்தை,மருமகன் என்ற உறவை தாண்டி தகாத நெருக்கம் ஏற்பட்டது.
குமாருக்கு உடல்நலம் தேறிய பின்பும் இந்த உறவு நீடித்தது. இது ஒருநாள் சீதாவின் கணவனுக்கும் தெரிந்தது. வழக்கமாக இப்படியொரு சம்பவம் நடந்தால் கொதித்துப் போகும் கணவர்களுக்கு மத்தியில் அவர் வித்தியாசமானவராக இருந்தார்.
மனைவியின் உடல் தேவையை குமார் பூர்த்தி செய்வதாக நினைத்துக் கொண்டு மனைவியிடமே இந்த உறவு உனக்கு வேண்டுமென்றால் குமாரை யாருக்கும் தெரியாமல் நீயே பதிவுத்திருமணம் செய்து கொள். அதற்கு நான் சாட்சி கையெழுத்து இடுகிறேன். ஆனால் கடைசி வரை என்னையும் உங்களுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்று கேட்டார்.
இந்த டீலிங் குமாருக்கும் சீதாவுக்கும் பிடித்துப்போக அவர்கள் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு திருமண பதிவு அலுவலகத்தில் திருமணம் செய்து அதனை பதிவும் செய்துக் கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு சீதாவின் நடவடிக்கைகள் மாறின. குமாரை மட்டுமே நெருங்க அனுமதித்த அவர், கணவனை விரட்டினார். மனைவியின் புறக்கணிப்பால் கணவன் ஊரை விட்டு சென்னை சென்றார். அவர் பல மாதங்கள் ஊருக்கு திரும்பாததால் ஏற்பட்ட சந்தேகமே குமார்–சீதா இடையிலான ரகசிய உறவு உறவினர்களுக்கு தெரிய காரணமாக அமைந்து விட்டது.இந்த தகவல்களை தெரிந்து கொண்ட போலீசார் இனி என்ன செய்வது? என்பது பற்றி உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து வருகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி