சுதவான்பூர் போலீசார் அவர்கள் அத்துமீறக் கூடாது என்று எச்சரித்தனர். இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதையடுத்து ஸ்ரீசந்த்ராயையும் அவரது நண்பர்களையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதனால் போதையில் இருந்த இளைஞர்கள் ஆத்திரம் அடைந்தனர்.
வாக்குவாதம் முற்றியதால் ஸ்ரீசந்த்ராய் தன் சட்டையில் மறைத்து வைத்திருந்த கைத் துப்பாக்கியை எடுத்து போலீசார் மீது சரமாரியாக சுட்டார். இதில் போலீஸ் அதிகாரி அனில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
போலீஸ்காரர் ஒருவரின் மகனும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து உயிரிழந்தான். அதன்பிறகு போதையில் இருந்த இளைஞர்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர்.இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த உயர் அதிகாரிகள் கொலையாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி