மகர விளக்கு பூஜை நாள் நெருங்குவதையொட்டி சபரி மலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 2500 போலீசார் குவிக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இதற்கிடையே, அய்யப்பன் கோவிலுக்கு செல்ல முயன்ற கர்நாடக பக்தர்கள் கூட்டத்துக்குள் ஒரு இளம்பெண் இருப்பதை பாதுகாப்பு பணியில் நின்ற பெண் போலீசார் கவனித்தனர். உடனடியாக அந்த பெண்ணை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.அவரிடம் விசாரித்த போது அவருக்கு 45 வயது என்பது தெரிய வந்தது. 10 வயது முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் சன்னிதானத்திற்குள் நுழைய அனுமதி கிடையாது என்பதால் பிடிபட்ட பெண்ணை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினார்கள்.
இனிமேல், வயது குறைவான பெண்கள் கோவிலுக்குள் நுழைய முயன்று பிடிபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவசம்போர்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி