லட்சிய திமுகவின் தலைவர் டி.ராஜேந்தர் திடீரென கட்சிப் பொறுப்பிலிருந்து விலகி கருணாநிதி முன்னிலையில் தன்னை தி.மு.க.,வில் இணைத்துக் கொண்டார். இதனால் லட்சிய திமுக கட்சி கலைக்கப் பட்டதா என்கிற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், லட்சிய திமுக தொடர்ந்து செயல்படும் என்று அக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ரோலக்ஸ் பாலன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,”டி.ராஜேந்தர் ஏழு ஆண்டுகளாக கட்சி நடத்தினாலும் இது வரை கட்சிக்காக எந்த நன்மையும் செய்யவில்லை. அவர் மட்டும் தான் தி.மு.க.வில் இணைந்துள்ளார். அவருடன் எந்த நிர்வாகிகளும் உடன் செல்லவில்லை.

இது கூட, ஏதோ பிரச்னையால் அவர் மிக அவசரமாக எடுத்துள்ள முடிவு தான். டி.ராஜேந்தரைப் பொறுத்தவரையில் அவரது மகன் சிம்பு பிரச்னை தான் காரணம். ஒரு நிறுவனத்திடம் பணம் கொடுத்து ஏமாந்த பிரச்னை போல நிறைய விவகாரங்களில் சிக்கி தவிக்கிறார் என தெரிய வந்துள்ளது.” என்று தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி