செய்திகள்,முதன்மை செய்திகள் கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்…

கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்…

கச்சத்தீவு அருகே  இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்… post thumbnail image
ராமேசுவரம் பகுதியில் இருந்து நேற்று காலை 673 விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். இன்று காலை சுமார் 300 மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் குட்டி ரோந்து கப்பல்களில் அங்கு வந்தனர்.

கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இங்கு மீன்பிடிக்க வரக்கூடாது என்று எச்சரிக்கை செய்து அவர்களை விரட்டியத்தனர். மேலும் சூசை என்பவரது படகு மீது கற்களை எடுத்து வீசினர். இதில் படகில் முன்பக்கம் இருந்த கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது.

மேலும் இலங்கை கடற்படையினர் மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளை அறுத்து எறிந்து நாசம் செய்தனர். இலங்கை கடற்படையின் அட்டூழியத்துக்கு பயந்து மீனவர்கள் மீன்களை பிடிக்காமல் உயிர் தப்பினால் போதும் என்ற நோக்கத்தில் அவரசமாக கரை திரும்பினர். பின்னர் அவர்கள் இலங்கை கடற்படையின் அட்டூழியம் குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி