சேலம் மணக்காடு மேற்கு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 45). இவர் அவரது அண்ணன் வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு சிகரெட் புகைக்கும் பழக்கம் உள்ளது.
நேற்று இரவு அவர் வீட்டில் படுத்து கொண்டு சிகரெட் குடித்தார்.அப்போது பெட்சீட்டில் சிகரெட் கங்கு விழுந்து தீப்பற்றிக் கொண்டது .இந்த தீ மளமளவென பரவி கணேசன் அணிந்து இருந்த சட்டை, வேட்டியிலும் பிடித்து கொண்டது. இதனால் உடல் கருகிய கணேசன் அலறி துடித்தார்.
இதை கேட்ட அவரது உறவினர்கள் ஓடிவந்து தீயை அணைத்தனர்.பின்னர் கணேசனை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி