அவள் தனியாக உறங்குவதை நீண்ட நாட்களாக நோட்டமிட்டு வந்த ஒருவன், நேற்று முன்தினம் இரவு மக்கள் நடமாட்டாம் அடங்கிய வேளையில் அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் அருகில் சென்று, துணியால் வாயை பொத்தி வலுக்கட்டாயமாக கற்பழித்து விட்டான்.மறுநாள் அதிகாலை, ஆடைகள் ஏதுமின்றி அந்த பெண் அலங்கோல நிலையில் அழுதுக் கொண்டிருந்த பரிதாப காட்சியை அவ்வழியே சென்ற சிலர் கண்டு திடுக்கிட்டனர்.
இது தொடர்பாக வந்த புகார்களையடுத்து, அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த உல்ட்டடங்கா போலீசார், வழக்குப்பதிவு செய்து ரெயில் நிலையம் அருகே நடைபாதைகளில் படுத்துறங்கும் சிலரிடம் விசாரணை நடத்தினர்.
அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், புத்தி சுவாதீனம் அற்றவள் என்றுகூட பரிதாபம் பார்க்காமல், அந்த பெண்ணை கற்பழித்த காமக்கொடூரனை போலீசார் நேற்று கைது செய்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி