அரசியல்,முதன்மை செய்திகள் தமிழக அரசியல் 1916 முதல் 2013 வரை ஒரு சிறப்பு பார்வை ( பகுதி 1)

தமிழக அரசியல் 1916 முதல் 2013 வரை ஒரு சிறப்பு பார்வை ( பகுதி 1)

தமிழக அரசியல் 1916 முதல் 2013 வரை ஒரு சிறப்பு பார்வை ( பகுதி 1) post thumbnail image
தமிழகத்தில் பிராமணர்களின் அதிகாரம் தலையோங்கி இருந்த சமயம், பிராமணறில்லாத வேற்று நிறத்தினர் ஒடுக்கப்பட்ட காலம், 1900கலில் இதற்கான வெகுண்டலின் பிறப்புதான் திராவிட கட்சி , ஆரம்பத்தில் தென்னிந்திய நலவுரிமை சங்கம் என்ற பெயரில் திரு T ம நாயர் மற்றும் திரு தியாகராய செட்டி ஆகியோரால் நிறுவப்பட்டது.பின்னாலில் “நீதிக்கட்சி ” என பெயர்மாற்றம் பெற்றது.அந்நாளில் மேல்மட்டத்திற்கு மட்டுமே அணைத்து வசதிகளும் செய்துதரபட்டன, பிராமணர் அல்லாதவர்களின் சமூக நீதி காத்திடவும், அவர்களின் கல்வி, அரசு அதிகாரத்தில் பங்கெடுப்பு போன்றவற்றை வலியுறுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டது. அக்கட்சி, பிராமணரல்லாதாரை ஒடுக்க, பிராமணர்கள் பின்பற்றி வந்த வர்ணாசிரம தத்துவத்தை முற்றிலும் எதிர்த்தது.

சென்னை மாகாணச் சமூகத்தில் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ம் நூறாண்டின் முற்பகுதியிலும் பிராமணர் மற்றும் பிராமணரல்லாதோருக்கிடையே வகுப்புவாரியாக பிரிவினை ஏற்பட்டிருந்தது. பிராமணர்கள், மொத்த மக்கள் தொகையில் தங்கள் சதவிகிதத்தை விட மிக அதிக அளவில் அரசு பணிகளில் இடம் பெற்றிருந்ததும், பிற சாதியினரை அவர்கள் நடத்திய விதமும் இப்பிரிவினைக்கு முக்கிய காரணங்கள். நீதிக்கட்சியின் உருவாக்கம் இத்தேவையை நிறைவேற்றி தன் ஆரம்ப ஆண்டுகளில் பிரித்தானிய இந்தியாவின் சட்டமன்றங்களிலும், பிரித்தானிய ஆட்சியாளர்களிடமும் முறையிட்டு அரசு பணிகள் மற்றும் சட்டமன்றங்களில் பிராமணரல்லாதோருக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் பெற முயற்சி செய்தது.

மொண்டேகு கெம்ஸ்ஃபோர்ட் அரசியல் சீர்திருத்தங்களின் விளைவாக இந்திய அரசுச் சட்டம், 1919 இயற்றப்பட்டு, சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.(இரட்டை ஆட்சி முறை என்றால் சட்டம், நிதி ஆகிய மிகமுக்கிய பொறுப்பு பிரிடன் அரசிடமும் விவசாயம், தொழில் , கல்வி ஆகிய மேலும் சில பொறுப்புகள் வெற்றி பெற்ற கட்சியினிரடும் இருக்கும் ) இம்முறையின் கீழ் 1920ம் ஆண்டு முதலில் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி பங்கேற்று வெற்றி பெற்றது.சென்னை மாகாணத்தில் இக்கட்சி தேசிய வாத இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அரசியலுக்கு மாறாக செயல்பட்டு 13 ஆண்டுகள் ஆட்சி புரிந்த நீதிக்கட்சி 1937-லில் காங்கிரசிடம் தோல்வியடைந்து அதனால் மீள முடியவில்லை.அதன் பின்னர் பெரியார் ஈ. வே. ராமசாமி அவர்கள் 1938-ல் நீதிக்கட்சியின் தலைவர் ஆனார்.

பெரியார் ஈ. வே. ராமசாமி அவர்கள் 1944-ல் நீதிக்கட்சியை திராவிடர் கழகமாக மாற்றிய பின் தேர்தலில் போட்டியிடுவதை நிறுத்தியபின் கட்சியின் பெயர் மாற்றத்தை விரும்பாத ஒரு குழுவினர் “நீதிக்கட்சி ” என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து 1952இல் போட்டியிட்ட பின் அப்பிரிவு செயலிழந்து விட்டது. அன்னி பெசண்டின் ஹோம் ரூல் இயக்கத்தால் பிராமணர்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் என நீதிக்கட்சி கருதி அதனை எதிர்த்து, காங்கிரசின் ஒத்துழையாமை இயக்கத்துக்கு எதிராகவும் செயல்பட்டு, மகாத்மா காந்தி பார்ப்பனியத்தை புகழ்ந்ததால் அவரையும் எதிர்த்தது. பிராமணரல்லாத அனைத்து பிரிவினரின் நலனுக்காக செயல்படுவதாக கூறிய நீதிக்கட்சி, முஸ்லீம்கள் மற்றும் தலித்துகளின் ஆதரவையும் இழந்தது.முஸ்லிம்களும் தலித்துகளும் பிராமணரல்லாத வெள்ளாள சாதியினரான முதலியார்கள் ம்ற்றும் பிள்ளைகள், பலிஜா நாயுடுகள், பெரி செட்டிகள், காப்புகள், கம்மாக்கள் ஆகியோரின் நலனுக்காக அது செயல்படுவதாக குற்றம் சாட்டினர்.

நீதிக்கட்சியின் செயல்பாடு:-


சாதி அடிப்படியில் இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தி, கல்வி மற்றும் சமய சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது நீதிக்கட்சி அரசுகளின் குறிப்பிடத்தக்க செயல்களாகும். நீதிக்கட்சியின் ஆட்சிகாலத்தில் ஆந்திரப் பல்கலைக்கழகமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் தொடங்கப்பட்டன.மேலும் நீதிக்கட்சி அரசுகளால் சென்னை நகரின் தற்போதுள்ள தி. நகர்ப் பகுதி உருவாக்கப்பட்டது.தமிழ்நாட்டை ஆட்சி புரிந்து கொண்டு இருக்கும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகியவற்றுக்கு நீதிக்கட்சியும், திராவிடர் கழகமும் கொள்கை மற்றும் அரசியலுக்கு முன்னோடியாக கருதப்படுகின்றது. தொடரும்….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி