நெடுங்காடு புத்தக்குடி கிராமத்தில் ரூ.116 கோடி செலவில் தனியார் விமானத்தளம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காரைக்கால் வந்த சூப்பர் ஏர்போர்ட் தலைவர் கோவை ஜே.வி.சௌத்ரி 2012 ஜனவரியில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என தெரிவித்திருந்தார். ஆனால் அதன்படி அடிக்கல் நாட்டு விழா நடைபெறவில்லை.
புத்தக்குடி மக்கள் விமான நிலையத்திற்கு ஏராளமான விளை நிலங்கள் பறிக்கப்படுவதால் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் மத்திய அரசின் சில துறையிகளிடமிருந்து விமான நிலையம் அமைக்க அனுமதி பெற்றும் போதுமான நிதி கிடைக்கவில்லை என்று கூறப்பட்டன. காரைக்கால் வந்த புதுச்சேரி முதல்வரிடம் விமான நிலையம் பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்ட போது விரைவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என்று கூறினார்.
சூப்பர் ஏர்போர்ட் தலைவர் கோவை ஜே.வி.சௌத்ரி தொலைபேசியில் கூறியது.
காரைக்காலை அடுத்த நெடுங்காட்டில் தொடங்கவுள்ள விமான தளத்திற்கு மொத்தம் 560 ஏக்கர் நிலம் தேவை. சுமார் 180 ஏக்கர் நிலம் தயார் நிலையில் உள்ளது. இன்னும் சிறிதளவு நிலம் கிடைக்க வேண்டும். அது நீதிமன்ற வழக்கில் உள்ளது. மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதியை தவிர மற்ற அனுமதிகள் வந்துவிட்டது. முதல் கட்டமாக 1.2 கிலோமீட்டர் ஓடுபாதை அமைத்து சிறியரக ஸ்பைஸ் ஜெட் 70 பயணிகள் அமைரக்கூடிய ஏடிஆர் விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ரூ.15 கோடி தேவைப்படுகிறது. இந்த நிதியை வழங்க வங்கிகள் முன்வந்துள்ளது. அதனால் மிக விரைவில் இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறும். அடிக்கல் நாட்டுவிழா நடந்துவிட்டால்அடுத்த ஒன்றறை ஆண்டில் விமான நிலையம் தயாராகிவிடும். அதன்பிறகு, மீதமுள்ள ஓடுபாதை அலுவலகமபயணிகள் ஓய்வறை உள்ளிட்ட கட்டுமான பணிகளை நடைபெறும் என்று கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி