இதற்கு சமந்தா எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டிருந்தார். சமந்தாவுக்கு சித்தார்த் ஆதரவு தெரிவித்தார். கோபம் அடைந்த மகேஷ் பாபுவின் ரசிகர்கள் சமந்தா, சித்தார்த் இருவரும் சினிமாவிலிருந்து வெளியேறுங்கள் என்று கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்நிலையில் ஹேப்பி டேஸ் உள்பட பல படங்களை இயக்கிய டோலிவுட் இயக்குனர் சேகர் கம்முலா சமந்தாவுக்கு ஆதரவாக நேற்று இணையதளத்தில் கருத்து வெளியிட்டிருக்கிறார். மகேஷ்பாபு பட போஸ்டரை பார்த்தேன். அதுபற்றி சமந்தா கருத்தையும் படித்தேன். சமந்தா என்ன கருத்து வெளியிட்டிருந்தாரோ அதுதான் என் கருத்தும். இதற்குபோய் எதற்காக சமந்தாவுக்கு எதிராக கண்டனம் வருகிறது என்று புரியவில்லை.
கருத்து சொல்ல எல்லாருக்கும் உரிமை உண்டு. எந்த வகையிலும் இது மகேஷ் பாபுக்கு எதிரானதல்ல. ஒரு பெண் போஸ்டரில் கேவலமாக சித்தரிக்கப்பட்டதற்குத்தான் அவர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் ஓய்ந்திருந்த இப்பிரச்னை மீண்டும் பரபரப்பாகி இருக்கிறது. இயக்குனருக்கு எதிராக ரசிகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி