அந்த இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது ஆங்காங்கே மனித உடல்கள் சிதறிக் கிடந்தன. பலர் குண்டு காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.குண்டு வெடிப்பில் ரஷீத்– உல்–இஸ்லாம், அர்ணிஷ் உசைன், பப்புரகுமான், அஞ்சன்ராய், லால்மோகன், தேவ்நாத் ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்களில் மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.
வட்டார வளர்ச்சி அலுவலகத்தையொட்டி இருந்த பாலத்தில்தான் குண்டு வெடித்தது. அங்கு சைக்கிள் ஒன்று சிதறிக்கிடந்தது. அதில் வந்தவர் உடலும் உருத்தெரியாத அளவுக்கு துண்டாகிக் கிடந்தது.போலீஸ் விசாரணை யின்போது பாலத்தின் வழியாக சைக்கிள் ஓட்டிக் கொண்டு வந்தவர்கள்தான் குண்டு வெடிக்கச் செய்தார் என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். எனவே அவர் மனித வெடிகுண்டாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
மேற்கு வங்கம்,போலீஸ், ஆஸ்பத்திரி
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி