புதிய ஜோடி அறிமுகம் …

புதிய  ஜோடி அறிமுகம் … post thumbnail image
ஹரியின் இயக்கத்தில் நான் சிகப்பு மனிதன் விஷால் தயாரித்து நடிக்கவிருக்கும் படத்திற்கு ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன .

விஷால் தயாரித்து நடித்த பாண்டியநாடு படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நான் சிகப்பு மனிதன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் லட்சுமி மேனன் ஜெகன் சுந்தர் ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளன .

இந்த படத்தை திரு இயக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். யு.டிவி நிறுவனம் வெளியிடுகிறது. நான் சிகப்பு மனிதன் படத்தைத் தொடர்ந்து ஹரி இயக்கவிருக்கும் படத்தை நடித்து தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார் விஷால்.

படத்தின் நாயகியாக ஸ்ருதிஹாசனிடம் பேசி ஒப்பந்தம் செய்து இருக்கிறார். நான் சிகப்பு மனிதன் குறுகிய கால தயாரிப்பு தான் என்பதால் விரைவில் ஹரி – விஷால் – ஸ்ருதிஹாசன் படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம். இப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி