கணவர்–மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சுலேகா குழந்தைகளை அழைத்துக் கொண்டு கோவைக்கு வந்துவிட்டார். சம்பவத்தன்று பள்ளிக்கூடத்துக்கு சென்று திரும்பிய மகன் சோனு (9), மகள் கதீஜா சான்யா (7) ஆகியோரை அழைத்துக்கொண்டு சுலேகா வீடு திரும்பினார். அப்போது காரில் வந்த நசீர் மனைவி சுலேகாவை மிரட்டி தள்ளிவிட்டு குழந்தைகளை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச்சென்றார்.
அதிர்ச்சியடைந்த சுலேகா இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கனகசபாபதி வழக்குப்பதிவு செய்து தந்தை மற்றும் குழந்தைகளை தேடி வந்தனர்.இந்நிலையில் அவர்கள் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெருந்தல் மன்னாவில் உள்ள நசீரின் அண்ணன் வீட்டில் குழந்தைகள் உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி, சப்–இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் ஆகியோர் கேரளாவுக்கு சென்று அங்குள்ள போலீசின் உதவியுடன் குழந்தைகளை மீட்டனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி