செய்திகள்,முதன்மை செய்திகள் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து …

பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து …

பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து … post thumbnail image
தாய்லாந்தில் வியாழக்கிழமை இரவு பேருந்து ஒன்று 40 பயணிகளுடன் வடக்குப்புற மாகாணமான சியாங் ரைக்கு சென்று கொண்டிருந்தது.

லோம் சக் மாவட்டத்தில் பெட்சபுன் பகுதியின் அருகே வந்து கொண்டிருந்தபோது 30 மீட்டர் ஆழம் கொண்ட பள்ளத்தாக்கில் அந்தப் பேருந்து தலை குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்து முற்றிலும் சிதைந்து விட்டது. இதில் சம்பவ இடத்திலேயே 29 பேர் பலியாகினர். நான்கு பேர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து பெட்சபுன் மாகாணத்தின் காவல்துறைத் தலைவர் மேஜர் ஜெனரல் சுஹிட் சமனா கூறுகையில், விபத்தினைக் கண்ணால் பார்த்தவர் வேகமாகச் சென்றுகொண்டிருந்த பேருந்து பள்ளத்தினுள் பாய்ந்தது என்று தகவல் தெரிவித்ததாகக் கூறினார். டிரைவர் தூங்கிவிட்டதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என அவர் தெரிவித்தார். பள்ளத்தாக்கிலிருந்து 28 உடல்களைக் கண்டெடுத்ததாகக் கூறிய அவர் பின்னர் மருத்துவமனையில் ஒருவர் இறந்துவிட்டார் என்றும் குறிப்பிட்டார். புத்தாண்டு விடுமுறையை ஒட்டி அதிகம் பேர் பயணிக்கும் இந்த இந்தப் பேருந்து விபத்து நடைபெற்றுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி