காதலரை மணக்கும் நடிகை …

காதலரை மணக்கும் நடிகை … post thumbnail image
தமிழில் அஜீத்துடன் அசல், சூர்யாவுடன் வாரணம் ஆயிரம், வேட்டை, வெடி, நடுநிசி நாய்கள் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சமீரா ரெட்டி. மோட்டார் பைக் நிறுவன அதிபர் அக்ஷய் வர்தேவுடன் கடந்த 2 வருடங்களுக்கு முன் சமீராவுக்கு நட்பு ஏற்பட்டது.

இருவரும் பல்வேறு இடங்களில் ஜோடியாக சுற்றித்திரிந்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் மோட்டார் சைக்களில் பல சமயங்களில் ஜோடிபோட்டு சுற்றி னர். அப்போது தன்னை யாரும் அடையாளம் கண்டுகொள்ள முடியாதபடி சமீரா ஹெல்மெட் அணிந்து காதலனுடன் சவாரி செய்தார்.

கடந்த 2 வருடமாக இவர்களது காதல் வளர்ந்தது. படங்களில் பிஸியாக நடித்து வந்த சமீரா ரெட்டி தனது காதலை ஒருபோதும் வெளிப்படுத்தாமல் ரகசியம் காத்து வந்தார்.கடந்த வாரம் சமீரா அக்ஷய் திருமண நிச்சயதார்த்தம் பாந்தராவில் உள்ள சமீராவின் வீட்டில் ரகசியமாக நடந்தது. இதில் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர். இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி