செய்திகள்,முதன்மை செய்திகள் கணவரின் கழுத்தை அறுத்த பெண் …

கணவரின் கழுத்தை அறுத்த பெண் …

கணவரின் கழுத்தை அறுத்த பெண் … post thumbnail image
விருதுநகர் முத்தால் நகர் சத்திய சாய் நகரை சேர்ந்தவர் கிருஷ்ண சாமி, 49,இவருக்கு, மனைவி பாப்பா, 45,மகன்கள் முனியாண்டி, 26, முனீஸ்வரன், 22, மகள் முனீஸ்வரி, 19, ஆகியோர் உள்ளனர். முனிஸ்வரனுக்கு, திருமணம் முடிந்து விட்டது. மகள் முனீஸ்வரி, கல்லூரியில் படிக்கும் போது, உறவினரான பாலமுருகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதற்கு, தந்தை கிருஷ்ண சாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில்,மகள் திருமணத்திற்கு, மனைவி பாப்பா தான் காரணம் என கூறி, கிருஷ்ணசாமி, தினமும் திட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ,கிருஷ்ணசாமி திட்டுவதை கண்ட பாப்பா ஆத்திரமுற்றார். அப்போது ஏற்பட்ட தகராறில், பாப்பா, மகன்கள் முனியாண்டி,முனிஸ்வரன், ஆகியோர் தாக்கியதில் கிருஷ்ண சாமி கீழே விழுந்தார். தலையில் காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, வீட்டிலிருந்த அரிவாளால், கிருஷ்ணசாமி கழுத்தை, மனைவி, மகன்கள் அறுத்தனர்.இதில் கிருஷ்ணசாமி பலியானார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி